பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/860

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீகாழி திருப்புகழ் உரை 301 கப்பல்கள் உலவும் கடல் முறையிட (கலங்கி ஒலிக்க), அசுரர்களின் உயர்ந்த பெரிய முடிகள் (தலைகள்) பெர்டியாக, வடவாக்கினியும் அடங்கிச் சாம்பலாக், பேய்கள் நடமாட, மயிலில் ஏறி, வஞ்ச வேல்கொண்டு (துஷடர்களை வஞ்சித் தழிக்கும் வேல்கொண்டு) கோபித்தவனே அழகிய சன்ன்ப என்ப் பெயரிய சீகாழி மகாநகரில் வீற்றிருக்கும் ஒப்பற்ற ஆறுமுகனே! உன்னிடம் (அடைக்கலம் புக) வந்த த்ேவர்க்ள்ரின் மனத்தில் (பங்க வீரியர்) பங்கப்பட்ட தோல்வியடைந்த வலிமைவாய்ந்தவர், தலைவன் மயிர் பறிக்கும் உற்சாகத்தினர், மிகுதியான பாவம் செய்தவர்கள், நீேே பயன் இல்லாதவர் (பயனை அடையாதவர்கள்), பாசத்திற் கட்டுண்ட வேஷக்காரர்கள், வஞ்ச்கர்கள், நிலை கெட்ட்வர் (தன்மை கெட்டவர்) நல்ல பண்பு குணம்) இல்லாதவர், கொலை செய்ய இசையும் மனத்தின்ர், இங்கு அவர்கள் எண்ணாயிரம்பேரும் உயரமாயிருந்த கழுவின்மேலே, பஞ்சபாதகர் ஆதலினாலே, அவர்களுன்ட்ய (முனை) முதன்மை கெட்டழியும்ப்டி அருளின பெருமாளே! (பேரருள் கனவி லும் நனவி லும் மறவேனே) (8) காளி என்கின்ற நாகம் பூசித்ததால் சிகாழி என்று பெயர் போந்தது. (9) மற்ற ரிஷிகளின் சாபத்தால் பராசர முநிவர் மச்சகந்தியை மணந்து மச்ச கந்தம்...துர்க்கந்தம் உடலிற் பற்றப் பெற்றார். அவர் சீகாழியிற் பூசித்து அந்தக்கொச்சை நாற்றம் நீங்கப் பெற்றார் ஆதலின் கொச்சை' என்று சீகாழிக்குப் பெயர் வந்தது. (10) இத் தலத்திற் ஆன்மாக்களின் மலம் கழுவப்படலாற் கழுமலம்' என்பது பெயர். (11) பிரமன் பூசித்ததால் பிரமபுரம்' எனப் பெயர். (12) பிரளய காலத்தில் தோணிபோல மிதந்த காரணத்தால் தோணிபுரம் எனப் பெயர்.

  1. பறிதலை - பாடல் 172 பக்கம் 398 கீழ்க்குறிப்பு. x எண்ணாயிரவர் - சமணர் - பாடல் 657 பக்கம் 9 கீழ்க்குறிப்பு. O பஞ்சபாதகம் - பாடல் 79-பக்கம் 183. * உறையவு மருளிய' என்றும் பாடம்.