பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/862

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீகாழி திருப்புகழ் உரை 303 774. சந்தனம், நறுமணமுள்ள புனுகு சட்டம் இவைதமை அணிந்துள்ள கொங்கைகளை உடைய மாதர்கள், (சரி) கைவளையலொடு வேறு வளைவுள்ள வளையல்களும் அணிந்துள்ள செவ்விய கையினர், அன்னம்போல நடந்து வரும் நடையை உடைய அழகிய மாதர்கள் எப்போதும் விளக்கமுள்ள அழகுள்ள வடிவத்தினர். வஞ்ச எண்ணங்கள் நிறைந்துள்ள மனத்தினர், தம்மை நெருங்கி வந்தவர்கள் தங்கள் மனம் மகிழும்படி பொருளைத்தர அவர்கள்மேல் மனதில் (அகத்தே) வஞ்சனை கொண்டு - (புறத்தே) நயமான பேச்சுக்கள்ைப் ப்ேசிப் பொருளைத் கவிர்கின்ற தந்திரம் வாய்ந்த யோசனைக்காரர்கள், பூமியில் தம்மை அணைபவர்கள் (இங்கு) தங்களிடம் செம்பெர்ன் (என்னிடம்) இல்லையே எனச் சொன்ன்ால், அதிகமாகக் கோபித்து (திங்கள் ஒன்றினில்) ஒருமாத காலத்தில் (நெனல்) நேற்றுக்கூட பொருள் உதவி செய்தானில்லை (இவன்) என்று சண்டைகள் விளைக்கும் ஆசைக்காரிகள் (ஆகிய இப் பொதுமகளிருடைய) விஷம் போன்ற உறவும் (அதனால் வரும்) பொல்லாத வறுமையும் என்னை விட்டு அகல உனது திருவருளைப் பாவிப்பாயாக (மந்தர) மலையைக் குடையாகப் பிடித்து பதக்களுக் உற்ற துயர் ஒழியும்படி அன்று அடர்ந்த மழையில் உ ரிந்த (அரி) திருமால், (மஞ்சு) மேகம் என்னும்படியான நிறத்தைக் கொண்ட் (அரி) திரும்ால் புக ழ்கின்ற மருகனே! மங்கை அம்பிகை (பார்வதி) மகிழும் சரவணபவனே! உயர்வும் விரும்பத்தக்க தன்மையும் கொண்ட யானை முகப்பெருமான் நாயகர் மகிழும் சகோதரனே! நல்ல வஞ்சிக்கொடி போன்ற பெண் குளிர்முகக்குறமகளாம் வள்ளியின் பதமலரைப் பணியும் மணவாளனே! (அல்லது) வள்ளி உன் பத்மலரைப் பணிய நின்ற மணவாளனே! தந்த னந்தன தனதன தனவென்று வண்டு (இசைவிண்டு முரல்தரு) இசையை வெளிவிட்டு ஒலிசெயும் நறுமண மலர்கள் உள்ள சண்பக விருகூடிங்கள் மேகத்தின் அளவுக்கு உயர்ந்து வளரும் சோலையிலே.