பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/870

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீகாழி திருப்புகழ் உரை 311 கற்ற புலவர்களின் (வைப்பு) சேமநிதி நீ என்றும், (பொய்யான புகழ்கூறிக்) குப்பையாம் செல்வயோகம் படைத்த மனிதர்களின் கையில் நான் அகப்பட்டு வெட்கம் அடைந்து நிற்கின்ற நிலையை நீ கண் பார்ப்பாயாக. சக்கரம் திருக்கையிற் கொண்ட திருமாலுக்கும், (திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரமனுக்கும், அழியாதவர் என்னும் கீர்த்தி வாய்ந்த பரமசிவத்துக்கும் எட்டுதற்கு அரியதான உண்மையான வேதத்தின் உற்பத்தியை (தோற்றத்தை) உபதேசித்த அந்த ஞான சொரூபனே! (கிரி) கிரெளஞ்சகிரியின் (புரை) பெருமையைக் குலைத்து, மாமரத்திலே புகுந்து ஒளித்திருந்த சூரன் தொளைபடக் குத்தின ராவுத்தனே (வீரனே)! அழகிய குமரனே! அரசனே! நீலோற்பலம், வெட்சிமாலை இவைகளை அணிந்த புயங்களை உடைய பெருமாளே! (கொச்சை) சீகாழியில் வாழ்கின்ற முத்தமிழ்ப் பெருமாளே! (வெட்சி நிற்பது பாராய்) 778. (தினமணி) சூரியன், (சார்ங்கபாணி) சாரங்கம் என்னும் வில்லைக் கையிற்கொண்ட திருமால், என்று சொல்லும்படி, மதில் நீளமுள்ளதாய், (சால) மிகவும் தினகரன்) சூரியனை (சூரியன்ஒளியை) (ஏய்ந்த) பொருந்திய மாளிகையில் அரண்மனையிலே, முத்தாலும் (செழு) அழகுள்ள ரத்னத்தாலும் அலங்கரிக்கப்பட்ட (பீடிகையில்) பீட்த்திலே (அமர்ந்து), இசை கிதம் பொருந்திய பாடல்களைப் புகழ்ந்து பாடுவோர் ஒன்று கூடிப் பாடவும் இரண்டு பக்கங்களிலும் ஒரேமாதிரியான வளையல்களைப் பூண்ட கையை உடைய மாதர்கள் (நின்று) கவரிவீச, வேய்ந்துமாலை - மாலைகளைச் சூடி புனுகுசட்டம், அகில், சந்தனம் இவைகளைப் பூசிக்கொண்டு, அரசபதவியிலிருந்து