பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/878

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீகாழி திருப்புகழ் உரை 319 (திதலை) தேமலையும், (பொன்) அழகிய (பாணி) அன்பையும் அல்லது (சொல்லையும்) கொண்ட, (கார்குயில்) கரியகுயில் (போன்று) அழகுடைய பொலிவு நிறைந்த (தோகைப்பாவையை) மயில் போன்ற LIIIGö}GTMGö}ሀL! (பதுமைபோன்ற) வள்ளியை (சாரத் தின முற்று). சாரும்பொருட்டு - அவளைத் தழுவும் பொருட்டுத் தினம் உற்று நாள்தோறும் அவளிடம் சேர்ந்து அவள் தோள்மிசை அணைந்தவனே! (திலதப் பொட்டு) சிறந்த பொட்டு, (ஆசைச்சேர்முக) விருப்பமுடன் அணியும் திருமுகத்தையுடையவனே! (அல்லது பொட்டு அணிந்துள்ள (ஆசைச்சேர்) பொன்னை நிகர்க்கும் திருமுகங்களையுடையவனே மயில் உற்றிட்டு ஏறி மயிலில் பொருந்தி ஏறி காழியில் (அமர்ந்துள்ள பெருமாளே!); சிவன் மெச்சும்படியாக அவர் காதில் உபதேசம் செய்த பெருமாளே! (அல்லது) மயிலில் பொருந்தி ஏறியவனே! சீகாழிப் பதியில் சிவபிரான் விரும்பும்படியாக அவர் காதைச் சிறப்பித்துத் "தோடுடைய செவியன்" என்ற தேவாரப்பாவை ஒதின பெருமாளே! (பாதச் சேவையி லருள்வாயே) 781. விஷம்போலப் பொருந்திய வடவாக்கினி என்று சொல்லும்படியாக (உயர்த்து) மேலெழுந்து, (ரவிவிரி கதிரென) சூரியனது வெப்பம் மிக்க கிரணங்களென்று சொல்லும்படியாகத் தனது கிரணங்களைப் பரப்பும் சந்திரனால் துன்பம் மிக அடைந்து (அச் சமயத்தில்) வருகின்ற (அல்லது சந்திரனால் வருகின்ற வருத்தும் தொழிலை மிகக் கொண்டு),ரதியின் கணவனாகிய மன்மதன் (கடுத்துவிடு) கோபித்துச் செலுத்துகின்ற (விரைதரு) வாசனை தருகின்ற இதழ்களுடைய (பூங்கணைகளுள்) தாமரைக்கணை கொண்டு