பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்! திருப்புகழ் உரை 81 (பிரமன் முதலியோர் சரீரத்தினின்றும்) (கக்கு) - கழன்ற, அக்கை - எலும்பை, தக்க - தகுந்த (அக்கக்கட்கு - அங்கங்கட்கு, (தமது) அங்கங்களுக்கு, (அக்கு) - (ஆபரணமாக) ஆக்கிய, (அக்கி) அக்கினிக் (கண் கத்த அத்தர்) - கண்ணையுடைய கர்த்தராகிய பிதா - சிவனுக்குக் குருநாதனாம் பெரியோனே! திரளான (நிரம்பப்) போற்று - துதிப் பாடல்களால் ஏத்தப் பெற்ற (கச்சிக்குள்) - அழகிய சிற்ப வேலைகள் காணக்கூடிய கச்சிக்குள் - அழகிய பெருமாளே! 478. (அயில்) வேல், (அப்பு) அம்பு, (கயல்) மீன், (அப்புத் தலை) நீர்க்கிடமான கடல், மெச்சு-வியக்கத்தக்க உற்பலம் (நீலோற்பமலர்), நச்சு - விஷம் தான் - கண் உரத்த - மார்பில் உள்ள (ஐ) - அழகிய (கனவெற்பு) பருத்த மலைதான் - கொங்கை, மேகம் (தான்) (அளகக் கொத்து) கூந்தல் தொகுதி - என்று இவ்வாறு உவமை கூறிப் பொய் பேசிச் சொல்பல கற்பனையாக அமைத்து, உருகி, (கற்பு(ள்)ளம்) மனோதிடம் உள்ள நெஞ்சம் நெகிழ்ந்து தடுமாற்றம் அடைந்து தூக்கம் ஒழிந்தும், செய்யவேண்டிய செயல்கள் ஒழிந்தும், துக்கம் கொண்டு, உக்கு - மெலிந்து, தளர்ச்சி (சோர்வு) உற்று, (தொடி) கைவளை பூண்ட மாதர்களுக்கு இவ்வாறு இளைத்துப் போய் அலையாமல் வேதத்தின் அழகிய பொருள்களைக்கூறி *(செக்கர்க்கு) சிவந்த உன் கழலிணைக்கு குரவு) குராமலரை இட்டுப்பூசித்து, (தமர்) உனது அன்பின் கூட்டத்தார் (அடியார் கூட்டம்), பற்றி - அன்பு வைத்துத் தொழுகின்ற செச்சைக் கழல் வெட்சி மலர் சூழ்ந்த திருவடியைச் சிக்கெனப் பற்றிப் பணியமாட்டேனோ! ++ "கழலோ முழுதும் செய்யோப்" கந்தரநுபூதி - 25.