பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/888

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைத்தீசுரண் கோயில்) திருப்புகழ் உரை 329 பாரமான அழகிய கொங்கை கோபுர உச்சி என்று சொல்லும்படியாக விரிந்து (ஏமலிப்பர்) - ஏமருதல் கொள்வர் களிப்புறுவார்கள், இதம் - இன்பகரமான (பாகு) வெல்லம், நல்ல கரும்பு, சர்க்கரை போல இனிக்கும் பேச்சினை உடைய மாதாகள (ஏடகக்குலம்) (ஏடகம்) மலர்க்கூட்டங்களைக் கொண்ட கரிய கூந்தலில் விளையாடும் வண்டின் கூட்டங்கள் பாட அழகிய தெருக்களிற் சென்று, பறவை யினம்போலப் பலபல சொற்கள் அமைந்த ராகங்களைப் பாடி மிகுந்த (இச்சகம்) முகஸ் துதியான பேச்சுக்களைப் பேசி, வஞ்சித்து, இன்ப மொழியாலே வாருங்கள், முற்பணம் தாரும்) முன்னதாகப் பணத்தைக் கொடுங்கள், (தாரும் இட்டமென) பணத்துடன் உங்கள் இஷ்டத்தையும் (அன்பையும்) கொடுங்கள் என (அல்லது முன்னதாகப் பணத்தைக் கொடுங்கள், அதுவே எங்கள் விருப்பம் என, அல்லது முன்னதாகப் பணத்தைக் கொடுங்கள், அப்பால் உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள் என - என்றெல்லாம் கூறி ஏணிவைத்து வந்து ஏறும்படி செய்து பின்ன்ர் ஏணியை - (இறங்க ஒட்டாது) எடுத்துச் செல்பவர்களான (வேசையர்களின்) செயல்களை நம்புதல் ஆமோ - நம்புதல் கூடாது என்றபடி). (சேடன்) ஆதிசேடன் (உக்க). மெலிய, சண்டாளரான கொடும்பாதகர்களான அரக்கர்கள் குலம் மாண்டொழிய, நீ (அட்ட) அழித்த குன்று ஏழு ஏழுகிரியும், அலைவீசும் ஏழுகடல்களும் ஒன்று சேர வற்ற (நீர்மை குறையும்படி) உலர்ந்துபோக நின்று விளையாடின வேல் ஏந்திய திருக்கரங்களாம் (ஈரறு தோள்மேல்) பன்னிரண்டு தோளின்மேல் Lā (சேண் நிலத்தர்) விண்ணுலகத்தவர் பொன் மலரைப் பொழிய (பூமாரி பெய்ய), (இருடியர்கள்) ரிஷிகள் (கட்டியம்) புகழப் பாடல்கள் பாட எட்டுத் திக்கிலும் உள்ள அரசர்கள் ஜே ஜே என்று தாளமிட்டு முழங்க, (செந்தாமரைக் கிழவி) இலக்குமிதேவி புகழும் வேலனே!