பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/892

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைத்தீசுரண் கோயில்) திருப்புகழ் உரை 333 யானும் மேவி - நானும் கலந்து - உன்னைப் போல (பரிசுத்த) உள்ளம் பெறவ்ே, மகிழ்ந்து மகிழ்ச்சிகொள்ளும் வேளே (கந்தவேளே) (ஆம்) நமக்கு உற்ற் துண்ையாகும் என்று (அல்லது வேளே யாம் என்னும் 鷺 லையை அடைந்து) அன்பு கூர்ந்திருக்க அருள் புரிவாயாக. காற்றினாற் பரந்ததுபோலப் பரவியிருந் சூரர்கள் இறக்கும்படி, ஜெயம் பெற்ற யமன் போன்றவலிமையையும், (பாது) சூரியன் போன்ற பேரொளிய்ையும் கொண்ட சத்திவேல்ை அங்கையிற் கொண்ட முருகனே! மன்மதனுடைய பாணம் (அட்டதனால்) வருத்தினதால் (தனக்கிலாத) பலகோடி மாதர்களைப் புணர்ந்த காளையாகிய திருமாலாம் (விடை) இடபத்தின்மேல் ஏறின தலைவன், எந்தை சிவ்பிரான் அருளின குழந்தையே! சேல்மீனுக்கு ஒப்பான கனன்னை Զ-ՃՃԻԼ-ԱԼ/ குறப்பெண்ணை சையுடன் அவள் தோள் பொருந்தச் சேர்ந்து உறைவேgனே! (உனது) - சீரை - புகழை ஒதும் பக்தர்க்ளின் அன்பில் வீற்றிருப்ப்வனே! தேவர்களும், மாதர்களும், சித்தர்களும், தொண்டர்களும் சென்று வணங்க (வேளுர்) புள்ளிருக்கு வேளுர் என்னும் வைத்திசுரன் கோயில் என்னும் தலத்தை மகிழ்ந்த பெருமாளே! சேவற்கொடி சுற்றியிருக்க மகிழும் பெருமாளே! (வேளே யாமெனப் பரிந்து அருள்வாயே)

  • காளை ஏறு கர்த்தன் எந்தை திரிபுர சம்மாரத்துக்குச் சிவபிரான் எழுந்தருளினபோது இறைவன் வெற்றி அடையப் போவது நம்மால் என்று தேவர்கள் நினைத்தனர். இதை உணர்ந்த இறைவன் தேரைச் சற்று அழுத்த தேர் ஒடிந்து யாவரும் நிலை கலங்கினர். அப்போது திருமால் ரிஷபமாகி இறைவனைத் தாங்கினர் என்பது வரலாறு.

" தேர் ஒடிந்திட அக்காலை.....இடபமாகி மாதவன் தாங்கினானால்" - திருவதிகைப் புரா - திரிபுர தகன4o. "தடமதில்கள் அவை மூன்றும் தழலெளித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ" திருவாசகம் - சாழல் 15 11 வேளுருக்கு உகந்த எனப்பிரிக்க # கேது கொடி சேவற்கொடியில் முருகனுக்கு மகிழ்ச்சி: கோழி யோங்கிய கொடி வாழிய பெரிதென் றேத்தி: வாரணக் கொடியொடு வயிற்பட நிறிஇ" திருமுருகா - 38. 219.