பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/898

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைத்தீசுரண் கோயில்) திருப்புகழ் உரை 339 ஒலி பெருகவே, அவைகள் - சபைகள் கூட்டங் கூட்டமாகக் கூடுவார்கள், அங்ங்னம் கூடி வீதியில் வரும் ஆடவர்களை வாருங்கள் என்று நயமுடன் இனிய வார்த்தைகள் சொல்லி, மன உருக்கத்துடன், ஆசை பூண்டவர்கள் போலத் தங்களுடைய வீட்டிற்கு கொண்டுபோய்ச் சேர்வார்கள்; அங்கு குவடு மலைபோன்றதும் அதிகபார முள்ளதுமான, ஆணி - காமத்துக்கு ஆதாரமாயுள்ள மா - அழகுள்ள கொங்கையில் முழுகிச் சுகக்கடலை அநுபவித்து வேர்வை பாயப் படுக்கையில் அமளி யாடி - கோலாகலத்துடன் இன்பம் பவிக்க, அதனால் பின்னர் வருத்தம் வருவதான الملتقى சூலைநோய் முதலான பல நோய்களாம் கடலில் =을 무- " வேதனைப்பட்டு இத் தேகத்துடன் அலைச்சல் உறுவேனோ, நாகலோகத்திலுள்ளவர்கள், சந்திரமண்டலத்தில் உள்ளவர்கள், பகல் லோகர் - சூரியமண்டலத்தில் உள்ளவர்கள் விதி நாடுளோர்கள் - பிரமலோகத்தில் உள்ளவர்கள், தேவர்கள், கணநாதர்கள், நந்திகண நாதர்கள், அந்தணர்கள், முதன்மையான யோகமார்க்கத்தில் ஏற்படும் ஜோதி விளங்கும் முநிவர்கள். நாதரே - நவநாத சித்தர்கள், நரர்கள் - மனிதர்கள், மன்-நாரணர் நிலைபெற்ற நாராயண மூர்த்திகள் - புராணவகை, பதினெண் புராணங்கள், வேத கித ஒலிகள் இவையெலாம், அசுரர்களின் முடிவு காலம், இதுவே - முடிவு காலம் என்று சொல்ல, நாசமாயசுரர் - அசுரர் நாசமாக, அவர்களிருந்த கிரி கிரவுஞ்சம் - எழுகிரி முதலானவை பொடிபடச் செலுத்திய வேலனே! மயிலனைய மாது, குறமாது, அமுதமாதின், அமுதவல்லி எனப் பெயர் பூண்டிருந்த தேவசேனையின் நல்ல தோழிமாது, துணையா யமைந்தமாது ஆகிய வள்ளி நாயகி என்கின்ற மின்னாளை மின்னொளி கொண்டவளைச் சுகத்துடனும், சோகம் - விரக தாபத்துடனும் இறுகி - அழுந்தக்கட்டி மார்பில் அவளது கொங்கையை விடாது அணைத்துச் சேர்ந்தவனே!

"வள்ளியின் முலைவிடாமல் அணைதல்" பாடல் 644-பக்கம் 508 கீழ்க்குறிப்பு.