பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை - 83 புயல் (மேகத்தை வாகனமாகக்கொண்ட அத்தை தலைவி (தேவசேனை)யையும், குயில்; (பேச்சின் இனிமையில்) குயில் போன்றவளும், தத்தை நிறத்தாலும், அழகாலும் *(தத்தை) கிளி ப்ோன்றவளும், (கிளை (கிள்ளை) கிளிகள், புக்கு (புகுந்து), தொளை மூக்கால் தொளைத்து உண்கின்ற பச்சைத் தினை விளை புனத்தில் (காவலிருந்த) (முத்து) முத்துப் போன்ற அருமை வாய்ந்த வள்ளியையும் சேர்கின்ற அழகிய புயவிரனே! (புரவி) குதிரைகள் (கொட்பு) சுழன்று வரும் (இரத) சூரியனுடைய தேர் - (வரும்) (அற்றத்து சமயத்தில் இருளானது (திக்கி) தடுமாறிப், (படி) உலகு உலகினின்றும் (மட்க வலி குன்றிப்போக (இருள் ஒழிய) புகல் கூவுகின்ற அழகிய கோழியின் ஜயக்கொடியை உடையவனே! t (கயில்) (பூமியை ஒரு நிலையில் வைத்துள்ள) கொக்கி. பூட்டு (தளர்ந்து) (அச்சு) அச்சத்தை (பயத்துை தர (தத்து) ஆபத்தான நிலையிலிருந்த (சயிலத்து) இமயமலையில் (உத்தரம்) வடதிசை - வடக்குத் திசை தாழாது (சமமான நிலையில்) நிற்க, (கரணி) செய்தவரான (அல்லது மருந்தாப் சமய சஞ்சீவியாய் உதவி புரிந்தவரான, சித்தர் - சித்த புருஷராம் + அகத்திய முநிவர் உள் தியானித்து வணங்கிய கச்சிப் பதியோனே!

  • தத்தைக்கிளை - கிளியின் கூட்டம் எனலமாம்.

t கயில் அச்சு தரம்தத்து - உலகம் நேர்படநிற்க ஏற்பட்டுள்ள ஆதாரத்தின் வலிமையானது ஆபத்து நிலை அடைய எனவும் பொருள் கர்னல்iம் கரணி - சிற்பி அச்சாணியைச் செப்பனிட்டது போலப் பூமியை நிலை நிறுத்தின சிற்பி போன்ற சித்தர் - (அகத்தியர்) எனலுமாம். இந்த அடிக்கு பிரமg ஜகந்நாதையர் பின்வருமாறு உரை கான்பர்.

  1. கயில் அசுத்த ரதத்து சயிலத்து தரம் நிற்க கரணி சித்து அருள் கச்சிப் பதியோனே". பூட்டு வாயை உடைய அழகிய தூய இரதத்தைப் போலவும் (தாம் இருக்கும்) மலையைப் போலவும் அதன் நிற்கும்ப்டியாக எல்லாக் கரணங்களையும் அதிதேவதையாக உடைய பராசத்தி தன் சித்தினை அருளி வைத்த காஞ்சீபுரத்தை உடையவனே அ சக்கரத்தை ரதமெனவும் மேருவெனவும் சொல்வது ஒரு முறை. அதற்குச் சமமானது காஞ்சி."

(தொடர்ச்சி பக்கம் 88 பார்க்க)