பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/932

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிடைக்கழி திருப்புகழ் உரை 373 ஆடையைத் தளர்த்தி விடுபவர்கள், இளைஞர்களின் பொருளைப் பறித்துப் படுக்கையிலே கனிபோன்ற தங்கள் வாயிதழில் உள்ள சுருள் பாக்கு வெற்றிலையில் ஒரு பாதி - புணர்ச்சி வேளையில் தருகின்ற (வசவிகள்) தேவதாசிகள் (அல்லது) கெட்ட நடத்தை உடையவர்கள், (ஆகிய பொதுமகளிரின்) கண் மயக்கிலே நான் வசம் அழியும் கவலை எனைவிட்டொழிய உன்னுடைய திருவருளைப் பாலித்தருளுக. கடல் திக் கொப்புளிக்க, வடக்கிலுள்ள (வரை) (கிரெளஞ்ச) மலை பொடியாக, சமணர்களின் கூட்டம் வரிசையாய் வைக்கப்பட்டிருந்த கழுவில் ஏறக் காரியத்தை நடத்தின மயில் வீரனே! அரன், அரி, பிரமன் மூவரும் முன்பு வழிபட்டுப் போற்ற அவர்கள்மேல் அன்பு பூண்டு, அவரவர்க்கு ஒப்பற்ற ஒரு (உபதேசப்) பொருளை உபதேசித்த பெரியவனே!

  1. வில் மொளுக்கென்று முறிபட மிதிலாபுரியில் சநகராஜன் அருளின (திருவினை) லகூழ்மீகரம் கொண்ட சீதையை அணைந்த திருமாலின் திருமருகனே!

திரண்டுள்ள பலா, கமுகு, சொரிகின்ற தேன்கொண்ட வாழை இவை யெல்லாம் வளர்கின்ற திருவிடைக்கழி என்னும் ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே! (கவலையற்றிட நினதருள் புரிவாயே) (372-ஆம் பக்கத் தொடர்ச்சி)

  1. ராமபிரான் சனகர் முன்னிலையில் வில்லை முறித்தது. வில்லதனை ஆண்டகை நாணினி தேற்றினான் தாள்மடுத்து முன்பயில் சூத்திரமிது எனத் தோளின்வாங்கினான் ஏத்தினர் இமையவர் இழிந்த பூமழை வேத்தவை நடுக்குற முறிந்து வீழ்ந்ததே - (கம்பராமா கார்முக- 61.)

f சநக மன் - ஜநகராஜன்.