பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/934

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாண்தோன்றி! திருப்புகழ் உரை 375 804. சூழ்ந்து சம்பவிக்கின்ற துக்கந்தரும் வினைகள் ஒன்றுகூடி நிலைபெறுவதற் கிடம்ர்ன்தும், நீரால் வளருவதுமான துணை யொத்த இந்த உடலும் உலகிடையே. தளர்ச்சியுற்று பதன் அழிந்து, அக்கினியில் நுண்ணிய சாம்பற் பொடிய்ாகிவிடும் குற்ற்ம் வாய்ந்த தன்மையை நெஞ்சினுள் நன்கு ஆய்ந்து உணராமல் (வீழ்ந்து) விரும்பி, விரைவுடன் சென்று, நல்ல கல்வி நூல்களில் ஆழ்ந்து ஆய்ந்து அறிந்து, நிரம்பப் பொருள் தேடவேண்டி, பொற்கொழுக் கொண்டு (பொன்னாலாய ஏர்க்காறு கொண்டு) வரகுக்கு உழுபவர்போல மனம்வேகும் தகைமையும் ஒழிந்து வினை பெருகும் தகைமையும் ஒ ழி ந்து, நல்ல (கதி) விளையும்படியான தகைமையில் உனது நல்ல திருவடிகளை நான் தொழும்படி என்னை ஆண்டருளுக. வாழ்வுற்று மேலான செந்நெறி வாய்க்கப்பெற்று ஆய்ந்த ஒழுக்ே உள்ள நல்ல தவசிகளும், வானில் உள்ள 蠶 (தேவர்களும்) (அல்லது - வான் - பெருமை) விளங்கும் பிறரும் உனது திருவடியை விரும்பிப் போற்ற மான் போன்ற (பொற்றொடிகள்) பொன்வளையல்களை அணிந்த மாதர் (வள்ளி தெய்வயானை) இருவரும் அணைந்துள்ள நல்ல புயமும் (பிற அங்கங்களும்) தோன்ற, ஆகாயத்தை அளாவும்படி உயர்ந்துள்ள மயில்மேல் ஏறி. ᎯᏑᏀ மிக ஆழ்ந்துள்ள பெரிய கடலில் வீழ்ந்து நெருங்கியிருந்த (எழு) கிரியிலிருந்த அசுரர்கள் தளர்வுற்று வருந்தும்படிப் போய்ப் போர்புரிந்த கூர்வேலனே!

  • தான் தோன்றியப்பர்' என்னும் திருநாமத்தை உடைய சிவபிரான் (திரு ஆக்கூர்ச் சிவன்) தேவியுடன் குடிகொண்டிருந்து வாழ்ந்து தந்த நல்ல குமரனே! தானே தோன்றி (சுயம்பு மூர்த்தியாய் விளங்கி) நிற்கவல்ல பெருமாளே! (நற்கழல்கள் தொழ ஆளாய்)
  • தானே தழைந்து சிவமாகித் தானே வளர்ந்து தானே இருந்த தார்வேணி யெந்தை' - திருப்புகழ் 1220.