பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/936

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தன்குடி) திருப்புகழ் உரை 377 805. என்னுடைய (சடலமாகிய அங்கம்) உடலாகிய உறுப்பு பல வகைத்தான (பங்கம்) இடர்களிற்படும் (தொந்தங்கள்) தொடர்புகள், எக்காலத்தும் உள்ள துயர்நிலை இவை ஒழியும்படியான ஒரு நாள் உண்டா! இன்பத்தைத் தரும் (உனது) செம்பொன்னாலாய கழல் என்னும் காலணிகள் பொருந்திய (கழல் தந்தும்) திருவடிகளைத் தந்து பின்பு எப்போதும்போலப் (பந்தம் கெட) பாசபந்தங்கள் அழிய நீ மயிலில் ஏறி. வந்து - (பிரசண்டம் பகிரண்டம் புவியெங்கும் திசை மண்டும்படி சுடரொளிபோலும் நின்று) வீரத்துடன் வெளியிலே உள்ள அண்டங்கள், பூமி எங்கும், திசையெல்லாம் நிறையும்படி பெருஞ்சோதி போல நின்று - (தரிசனந்தந்து) நின்று, அவ்வாறு நீ நிற்பதால். வஞ்சகமே குடிகொண்டு திரிகின்ற நெஞ்சினனும், குற்றமே என்றும் செய்கின்ற (வண்டனும்) தியோனுமான தனியனேனுடைய (பவம்) பிறப்பு ஒழியாதோ நீங்காதோ! தந்தந்தன திந்திந்திமி என்றும், (பல சஞ்சம்கொடு) சஞ் சஞ் என்னும் பல ஒலியுடனேயும், தஞ்சம்புரி (அடியார்களுக்கு அடைக்கலம் - புகல் அளிக்கின்றேன் என்று சொல்வது. போலக்கொஞ்சி ஒலிக்கும் சின்னமணி மாலைகளின் சந்த ஒலியைக் கண்டும், புயல் அங்கன் - மேகநிற உடலை உடைய திருமால், (சிவனம்பன்) - சிவன் என்னும் ப்ெரியோன், (படைப்புப்) புதி m தலைவனாகிய (சம்பு) பிர்மன் - (மூவரும்) 蠶 ளங்கி நின்று, தினந்தோறும் (அடியார் உள்ளத்தில்) ள்ையாடுகின்ற கந்தனே! என்றன் குருவே! என்று தொழுத (அன்பன்) நக்கீரருடைய பாடலைக் கேட்டு (அவர்) (அடைபட்ட குகையினின்றும் - பூதத்தினின்றும்) பிழைத்து உய்யும்படி அன்று அன்புடன் (அவர்முன்) வந்தவனே! (கற்கண்டுபோல இனிக்கும்) பழங்கள் சிந்துவதால் சுவை மிக்க நீர் உள்ள சுனைகள் விளங்கும் கந்தன்குடி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (தமியன் தன் பவம் ஒழியாதோ)