பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/944

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஅம்பர்) திருப்புகழ் உரை 385 சூதாட்டப் பந்தயங்கள் பேசி, அஞ்சுவகை சாதி - ஐந்து வகைப்பட்ட ஜாதியர் (இனத்தினராம்) ஐம்புலன்கள் - வின்ன்ையும் நிலை பெயர்த்து ஒடவல்ல (கண்டர்) வீர்ர்கள், மிக்க (தோதகம்) வஞ்சகச் செயல்களை அன்பு காட்டுவது போலப் புரிந்து, (சிந்துபரி). கடற்குதிரை - வடவா முகாக்கினி (கந்துபாயும்) முழுப்பாய்ச்சல் பாய்வது போலப் பாய்ந்து செல்லும் வீதி மண்டலம் வீதி வட்டத்தில், பூண் அமர்ந்து ԼԱՔն)Ի தலைக் கொண்டு - சிக்கிக்கொண்டு, கழி - மிக்க கோலமன்டி அலங்காரங்கள் நிறையும்படி நின்று அனுபவித் து - இன்பவகையே வேண்டுமென்னும் கண் நோக்கத்தால் தளர்ந்து - (ஈற்றில்) ஐம்புலன்களும் ஒடுங்குகின்ற அந்தச் சமயத்தில் (வேதியன்) பிரமன் . (புரிந்து தெரிந்து அனுப்பின (ஏடு - சிட்டைப் பார்த்த அளவில், (ஒடி) உயிர் பிரிந்து ஒட கொடிய சுடுகாட்டைச் சேர்ந்து (உற்றார்) என் உடலைச் சுட்டெரிக்கக் கழிந்துபோய் வெந்து (உகுந்திடும்) சாம்பலாகச் சிதறிப் போகின்ற இந்த வருத்தம் என்று ஒழியுமோ! (ஆதித்த மண்டலம்) சூரிய மண்டலங்கள் ஒன்று சேரவும், சிறந்த சந்திரமண்டலம் அதனுடன் கூடவும், தாமரையில் வீ ற்றிருக்கும் பிரமனது உலகம் அங்கு கூடவும், வளைவு காட்டும் (கன் போன்ற வளைவுகள்) படர்ந்துள்ள தோகையைக் கொண்ட (உனது) மயில், கடல் வட்டத்தைக் கடந்து அங்கங்கே உள்ள அண்டங்களாம் பிரதேசங்களைத் தேடிப் பொருந்தியும், (அதோ முகான மனன்டலம்) கீழே உள்ள பாதாள லோகத்தில் உள்ள ஆதிசேடனை அங்குக் கொத்தி அதை (அயில்) உணவுகொண்டு உலாவவும் (சூதர்) சூரியர்களின் மண்டலங்கள் து.ாளெழுந்து பொடியாகி விண்ணிற் பறந்தோடவும் நெருங்கி அங்ங்னம் நெருங்கி வருவதைக் கண்டு ஒவ்வொரு சூரியனும் உருண்டு புரண்டு ஓடுவதைக் கண்டு (நகை கொண்ட) சிரித்து விளையாடின வேலனே! (சோடை கொண்டு உளம்) உள்ளத்தில் (சோடை) விருப்பம் கொண்டு, காட்டு மங்கையாம் வள்ளிமீது எழுந்த மோகத்தில் அவளுடன் விளையாடி, இந்திரனாதி, தேவர்கள் வந்துதொழச் சோழ மண்டலத்தைச் சார்ந்த அம்பர் என்னும் தலத்தில் வாழ்ந்து வீற்றிருக்கும் தம்பிரானே! (இடர் என்று போமோ)