பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/950

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இஞ்சிகுடி) திருப்புகழ் உரை 391 கூந்தலைச் சீவி வாரி விதம் விதமாக அழகிய வகையில் முடித்து, ஆலகால விஷம்போல வலிமை கொண்டதான) விஷப் பார்வை (கண் ஆனது) காதின் எதிரில் போய்ச் சண்டையிடும் அமுதமயத்ததாம்; அவ்வண்ணம் அங்கு உள்ள (நிஷடுரம்) கொடுமை கொண்டதான மாய சக்தி உள்ள கண்கொண்டு, உள்ளே வஞ்சகமுள்ள மனத்துடனே, (புறத்தே) ஆசை மொழிகளைக் கூறிச் (சந்தித்த) எவருடனும் அன்பு காட்டி மெய்யே உருவெடுத்ததோ என்னும்படி ஆசைகடிய சாமர்த்தியத்துடன் மொழி பேசி. அன்றைய பொழுதுக்கான காசுப் பொருளைக் கிரகிக்கின்ற (பொது) மங்கையரின் பொய்யன்பாகிய மோகவலையில் விழுதல் இல்லாமல் உன்னைப்பாடி மோகூடி வீட்டில் புகும்படியான ஒரு நாள் (எனக்குக்) கிடைக்குமா? (சங்கம்) கூட்டமான (தசக்ரீவனோடு) பத்துத்தலையனாம் ராவணனோடு (சொல) துTது சொல்லுதற்கு வேண்டிய (வளம்) சொல்வளம் முதலிய ஆற்றல்கொண்டு (மிண்டு செயப்போன) வீரச்செயல்கள் செய்வதற்குச் சென்ற (வாயி சுதனொடு) அநுமாரொடு, (சம்பவ) நிகழ்ச்சிகளிற் சம்பந்தப்பட்ட சுக்ரீவன் முதலான எழுபது வெள்ளம் சேனையுடன் (சண்ட) வலிமை வாய்ந்த (கவிச் சேனையால்) குரங்குப் படையால் முன்பு அலைகடலைக் குன்றுகள் (சிறுமலைகள்) கொண்டு அடைத்து - அணைகட்டிக் - (கடலைத்தாண்டி) அக்கரையில் (இலங்கையில்) ஏறி, மோச எண்ணமுடைய அசுரர்களுடைய சுற்றம் அழிந்து ஓடச்செலுத்தின அம்பினைக் கொண்ட தலைவன் பூரீராமரின் திருமாலின் மருகனே! எந்தப் ப்ரதேசத்திலிருந்து நினைப்பவர்களுக்கும் நேசனே! சரவணனே! (சிந்துரம்) செம்பொடி - *(கர்ப்பூரம்) பச்சைக்கர்ப்பூரம் இவை அணிந்துள ஆறுமுகனே! குக்னே! அடியேனுக்கு உரிய சாமிநாதப் பெருமானே! வயலூரில் உறைகின்ற வேலனே!

  • கர்ப்பூரச் சொக்கர் - மதுரைக் கலம்பகம் 54.