பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/958

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுவூர்) திருப்புகழ் உரை 399 814. எனது அடிநாளில் (வாழ்க்கைத் தொடக்கத்தில்) உனது திருவடியை (என் தலைமீது வைத்து, அன்புடனே உபதேசப் ப்ொருளை (எனக்குப்) போதித்து, சிவமந்திரங்களாலே (என்னைத்) தவஞானக் கடலில் ஆட்டுவித் து - தவநிலை ஞானநிலை இவை தமிற் புகவைத்து என்னை (உனது) திருவருளினாலே உன்னைச் சார்ந்த (சதுராகத்தோடு) சதுர் - சாமர்த்தியம் உள்ள ஆகத்தொடு ஆகத்தினரோடு - உடலினரோடு - (உன் சதுராகத்தொடு) உன்னைச் சார்ந்துள்ள தேர்ச்சிபெற்ற அடியார் கூட்டத்துடன் (என்னைக்) கூட்டி வைத்துத் தேவர்களும் அறியாத முத்தமிழையும் எனக்குப் போதித்து, முன்டக தளிர் வேதத்துறை (முண்டக உபநிஷத் முதலான உபநிடத உண்மைகளையும் வேதத்துறை - வேத வழிகளையும் புலப்படுத்தி, அக்கினியாதி மும்மண்டலங்களும் உள்ள மேலிடத்தே கலைசோதிக் கதிர்காட்டி - இடைகலை - பிங்கலை என்னும் நாடிகளின் மார்க்கமாக ஏற்படும் ஜோதி ஒளியைத் தரிசிப்பித்து, (ஆன்மாவை) அந்த - நல்ல பேரொளியுள்ள பரநாதத்தொடு -பரசிவத்தொடு கூட்டி, முன்னதாக சுழிமுனை நாடி விளங்கும் (வாசற்படி) முதல் வாயிலினிடத்தே - கவனம் கொள்ள, விதிதாவி - பிரமபீடமாகிய சுவாதிஷ்டான ஆதாரத்தைக் கடந்து கமலாலைப்பதி சேர்த்து மூலாதார ஸ்தலமான திருவாரூர் முதலிற் சேர, அது முதலாக உள்ள தலங்கள் - பிற ஆதார ஸ்தலங்களாகிய திரு ஆனைக்கா, திரு அண்ணாமலை, சிதம்பரம், காளத்தி, காசி இவைகள் புலப்பட யோக ஒளியை ஏற்றிவைத்து, அன்புடனே ஒளிவீசும் தோகையை உடைய மயில்வாகனத்தின் மேல் நீ வந்து அருளிய செயலை மறக்க மாட்டேன், (யோகாதுபூதி தந்து, யோக நிலைக் காட்சிகளை யான் காணவைத்த அன்பையும், மயில்மேல் தந்த தரிசனத்தையும் மறவேன் என்றவாறு) விற்படைகள் விழவும், கடல்போன்ற கூட்டம் கெட்டழியவும், அசுரர்களின் தலைகளை அழித்து, (அம்பர சிரத்தில்) ஆகாயத்து உச்சியில் உள்ள சுவர்க்கத்தில் (மாலை இந்திரனை புக ஏற்ற குடியேற்றிவைக்கச் செலுத்தின ஒளிவேலனே!