பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/964

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாஞ்சியம்) திருப்புகழ் உரை 405 திருவாஞ்சியம் 816. (இபம்) யானைப்படை, (மாந்தர்) காலாட்படை முதலிய படைகளை உடைய சக்ரவர்த்தியாய், நிறைந்துள்ள நால்வகைப் படைகளையும் ஆண்டு (கொண்டு) அரசுபுரிந்து, தனது ஆக்ஞா சக்கரம் வேலை முறைகளை நடத்த அங்ங்னம் வாழ்ந்து, திக்குவிஜயம் செய்து, உலகுக்கு அரசனாகி (ஏக சக்ரவர்த்தியாகி) பெருமை மிக அடைந்து, வட்டவடிவான சாய்வு மெத்தை அணையின்மேல் உள்ள விரிப்பிற் சார்ந்து - சாய்ந்தமைந்து-ஜெயத்தைக் குறிக்கும் (வாகை) மலர்மாலை (என்ன), (எழிலார்ந்த) لئے/!AGز நிரம்பின (பட்டி வகை)-ஆடை (துணி) வகைகள் என்ன; நறுமணக் கலவைப் பூச்சு (என்ன), (தபனாங்க ரத்ன அணிகலன்) சூரிய ஒளியைத் தன் உறுப்பிலே கொண்ட தன்னகத்தே கொண்ட ரத்ன மணியாலாய அணிகலன் (ஆபரணங்கள்) என்ன இங்ங்னம் இவையெலாம் சேர்ந்த (விச்சு வடிவது) ஒரு (மனித) வித்துவின வித்தின் வடிவு இது (இவ்வடிவினின்றும். உடலினின்றும்) உறவினர் சூழ்ந்திருக்கப் பெருமை மிக்கஉயிரானது நழுவியபோது - பிரிந்துபோன பொழுது. நெருப்பிலே இட அந்த நெருப்பு கொளுத்திவிட (ஈற்றில்) அவ்வுடல் ஒருபிடிசாம்பலான நிலையை அடைவதை ஆறிந்திலர் பொருளாசை மிகுந்து உனது திருவடியைத் தொழ நினைக்கின்றார் இல்லை - நினைப்பதில்ல்ை. (உபசாந்த) மன அமைதி கொண்ட சித்தம் - உள்ளத்தை உடையவர்களும், குருகுலத்தில் (பவ) உதித்தவர்களுமான (தருமன் முதலிய பஞ்ச) பாண்டவர்க்கு (வரதன்) வேண்டிய வரங்களைக் கொடுத்தவன், மை உருவோன் - கரு மேகநிறத்தவன், பிரசித்த நெடியவன், கீர்த்தி பெற்றவன், விசுவரூபம் கொண்டவன், ரிஷிகேசன் (இருடிகேசன்)