பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/974

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஜயபுரம்) திருப்புகழ் உரை 415 விஜயபுரம் 819. குடல், கொழுப்பு, எலும்பு, மாமிசம், (ஊன்), பரந்துள்ள ரத்தம், நரம்பு , இவைகள் தோலின் இடையே குளுகுளு என்று அமையு ம்படி வைத்து மூடப்பட்டுள்ளதும், மலமும் பிற அழுக்குகளும், பொதிந்துள்ள ஒன்பது துவாரங்களை உடைய சிறு குடிலாகிய இவ்வுடலை - நீரிலே தோன்றுகின்ற மொக்குளினும் வேகமாக அழிகின்ற மாயமான (அடலை சாம்பலாகப் போகின்ற (அல்லது துன்பத்துக்கு ஈடான) உடம்பை விரும்பி எப்போதும் சில சாரம் இல்லாத (உபயோகமில்லாத மருந்துகளையும் பலவித யோகவகைகளையும் உபயோகித்துப் பார்த்து அநுட்டித்துப் பார்த்து. வேதனைப்படுகின்ற மனத்தில் படும் (ஆகுலம்) துன்பம் (அலம் அலம்) போதும் போதும் என்றைக்குத்தான் இனி (அல்லது. போதும் போதும் என்றுணர்ந்து இனி) நானும் உன்னுடைய அழகிய தண்டை எப்போதும் சூழ்ந்துள்ள திருவடிமலரை அடைவேனோ (தெரிய இல்லையே): காலி இடம் சற்றும் இல்லாமல் நெருங்கும் அசுரர்கள் எல்லாரும் இறந்துபடவும். (எழுபூதரம்) எழுகிரிகள் இடிபட்டுப் பொடியாகவும், காட்சிக்கு இன்பம் தரும் கடல் வற்றிப்போகவும்: தேவர்களும் சிறை நீங்கி அவர்களுடைய (அமராவதி) என்னும் ஊரில் விளங்கவும் விட்ட (செய்வித்த) ஆதரவானவனே அழகிய படங்கள் பொருந்தும் ஒரு ஆயிரம் முகங்களைக் கொண்ட

  1. "th

விஷம் தரிப்பதான பாம்பாகிய ஆதிசேடன் மேருமலை என்னும் வில்லில் (நானாகப்) பூட்டப்பட்டு அவ் வில் வளைபடு முன்னரே, திரிபுரங்கள் சாம்பலாக ஒளிவீசும் சிரிப்பை வெளியிட்ட புராரி (திரிபுரப் பகைவர்), மன்மதனைக் கோபித்து (எரித்தவர்) ஆகிய சிவபிரானது கண்களிற் (பொறியாகப்) பிறந்து, கங்கையின் மீது வளர்ந்த சிறுவனே வட விஜயபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (தண்டை விடாமல ரணைவேனோ)