பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/986

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூர்! திருப்புகழ் உரை 427 எழுதுதற்கு முடியாத அழகினளாம் குறமகளின் வள்ளியின் - இரண்டு கொங்கை மலைகளில் முழுகின இளையவனே என்கின்ற (உரையானது) சொல்லானது எனக்கு இன்பம் தருவதும், நான் உன் இரண்டு பதங்களை அடைவதுமான ஒரு நாள் (என்றேனும்) வருமா! (சுரபி) பசு (மகவினை) இறந்துபட்ட தன் கன்றினை, எழுபொருள் வினவிட எழுப்புதற்கு வழியை ஆராய்ந்து நாடி-(மனுவின்)மநுநீதி சோழனுடைய (நெறி மணி) . அறநெறியைக் காட்டும் ஆராய்ச்சி மணியை (அசைவு உற) சென்று அசைத்து ஆட்ட அ இசை அந்த மணி ஒலியானது மிக்க துயரை விளைத்து (அரசனது) காதில் (அடிபட) ஒலிக்க, (அரசன் அச்சம் உற்று) வினவுமின்-போய் விசாரியுங்கள், அதிதிது - மிகவும் கொடுமையான செயல் ஏதோ நடத்திருக்கின்றது. (துணிவில்) நிச்சயித்துப்பார்க்கில் - ஆய்ந்து பார்க்கில் ஏதோ பெரிய பிழை வந்துளது என எழுந்து வந்த மதுச்சோழன் - உள்ளம் உருகி, அவன் வாயினின்றும் "ஹரஹர சிவசிவ" என்ற வார்த்தைகளை வரச்செய்த ஒப்பற்ற அந்தப் பசு வேதனைப்பட்டு கண்ணிர் பெருக்குதலைக் கண்டு, நடுநிலைமை அறிந்து (இறைவனைத்) தியானித்து, அந்த பசுவுக்குத் துயரத்தை தரும்படியாகத் (தேரை) (நடவிய) ஒட்டின (பழுதின் மதலையை) குற்றத்துக்கு ஆளான தனது பிள்ளையின் உடல் இருண்டு பிளவுபடும்படி அவன்மேல் படியும்படித் தேரை நடத்தும்படிச் சொன்னவனாகிய மது ஆண்டருளின திருவாரூர் (அல்லது மதுவுக்கு அருள்பாலித்த திருவாரூர்)ப் (படியில்) பூமியில் தலத்தில் ஆறுமுகனே! சிவகுமாரனே! கணபதியின் தம்பியே! குமரனே! அரசர் தலைவனே! சரவணனே! கடல் முறையிட்டலற வேல்கொண்டு செலுத்தின பெருமாளே! - (இருபதம் அடைவதும் ஒரு நாளே)