பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/988

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூர்) திருப்புகழ் உரை 429 826. பாலோ! தேனோ! பலாப்பழத்தில் உள்ள சுளைதானோ! தேவர்கள் உண்ணும் அமுதம் தானோ! கரும்புரச வெல்லப்பாகோ! ஊன் ஒன்றுபட்ட (குழந்தையாய் அவதரித்த) அல்லது ஊன் உருகப்பாடிய மகன் திருஞானசம்பந்தர் உன்னும்படி (தேவி) அருளின ஞானப் பால்தானோ! வேறு வேறு ஏதாவதோ-(மகளிரின்) மொழி என்றும், அடு கொடு.கொல்லுதலைக் கொண்ட வேல்தானோ, அம்புதானோ (அவர்களின்)கண்கள் என்றும், முகமானது-பாதுவோ-சூரிய ஒளியதோ, ஆகாயத்தில் ஊர்ந்து செல்லும் சந்திர ஒளியோ என்றும், (மகள்) பெண்கள்பால் மகிழ்ச்சிகொள்ளும் நான் (நாலாம் ரூபா)-பல உருவமும் கொண்ட உருவத்தனே! தாமரை போன்ற ஆறுமுக ஒளியே! வேறு எதுவோ! (மாதோம் எனது அகம்) பெருங்குற்றம் கொண்ட என்னுடைய மனத்தில் வளர்கின்ற சோதியே! நானோ நீயோ பளிங்குபோல விளங்கும் இடம்; அது (ஒரு சோதி நாடுதானோ அல்லது மோகூடிவீடோ! நடுநிலைமையான உண்மையை மொழி என்று வேண்டி, நடுவில் உள்ள துணுக்குச் சமமான தோள்களை உடையவனே! தேவர்கள் முன்னிலையில் பெருமைதங்கிய சபையில் நாதனாப் விளங்குபவனே! (தாதா) கொடையாளனே! (அல்லது உனது திருவருளைத் தா (கொடு) தா (கொடு) என்று என்மனம் உருகுமாறு திருஅருள் புரிவாயாக காதல் பூண்டவராய்த் தேவர்கள் பூமாரி பொழிய (அவதாரா) அவதரித்தவனே தோன்றியவனே! சூரனே! என்று முநிவர்கள் புகழும் மாயாரூபனே! ஹர ஹர! சிவ சிவ! என் „Дl/ ஒதாமல் வாதாடி நின்ற அவுணர்களும், அவர்தம் ஊரில் இருந்தவர்களும், அலைகடலும் கோகோ கோகோ என்று அலறவும், மலைகள் (கிரவுஞ்சம் எழுகிரி) வெடிபட்டுப் பொடியாகவும், வாளாலும் வேலாலும் அவர்களை அழிவு செய்தருளிய முருகனே!