பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 முருகவேள் திருமுறை (7- திருமுறை 1035. துதிக்க அருள் தா தான தான தனத்தம் தான தான தனத்தம் தான தான தனத்தம் தனதான காருலாவு குழற்குங் கூரி தான விழிக்குங் காதல் பேணு நுதற்குங் கதிர்போலுங். காவி சேர்பவ ளத்தின் கோவை வாயித ழுக்குங் காசு பூணு முலைக்குங் கதிசேரா, நேரி தான இடைக்குஞ் சித வார நகைக்கும் நேரி லாத தொடைக்குஞ் சதிபாடும். நீத மான அடிக்கும் மாலு றாத படிக்குன் ணேய மோடு துதிக்கும் படியாராய், பார மேரு வளைக்கும் பாணி யார்சடை யிற்செம் பாதி சோம னெருக்கும் புனைவார்தம் பால காஎன நித்தம் பாடு நாவலர் துக்கம் பாவ நாச மறுத்தின் பதமீவாய் சோரி வாரி யிடச்சென் றேறி யோடி யழற்கண் ஆல காளி நடிக்கும் படிவேலாற் சூரர் சேண்ை தனைக்கொன் றார வார மிகுத்தெணி தோகை வாசி நடத்தும் பெருமாளே (41) "திரிபுரம் எரித்தபோது மேரு மலையை வில்லாகச் சிவ பிரான் வளைத்தனர் - பாடல் 285-பக்கம் 206கீழ்க்குறிப்பு.