பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 3 996. ஞானம் நிறைந்தவனாய், குணாதிதனாய் உள்ள ஞானமூர்த்தியே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்: தலைவனே உருவம் அற்ற முர்த்தியே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; எல்லாக் கலைகளின் சாரமாயள்ள தெய்வமே' உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன் - (மலர்ப் பானங்கள் ஐந்து கொண்ட அரசனாம் மன்மதனுடைய மைத்துனனாம் அரசே உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; கடப்ப மலர்களைத் தன்னிடம் கொண்ட திருவடிகளை உடையவனே உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; (போகங்களுக்கு இன்பங்களுக்கு ( ம்) பொன்னுலகைக் (காத்தளித்த) அரசே உன்னை வணங்குகின்றேன். வணங்குகின்றேன்; சங்கத்தார் போற்றத்தக்க (அல்லது சங்கப் பலகையில் ஏறியமர்ந்த) சிறப்பு வாய்ந்த முத்தமிழ்ச் செம்மலே உன்னை வணங்கு கின்றேன், வணங்குகின்றேன். (வேதனத் த்ரயம்) இருக்கு யசுர், சாமம் எனப்படும் மூன்று வேதங்களும் (போற்றும்) வேளே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; வாழ்கின்ற மூவுலகங்களும் (போற்றும்) செல்வனே, உன்னை வணங்குகின்றேன், வணங்கு கின்றேன். - என்று போற்றி உன் திருவடித் தாமரைகளில் வி ழாமல், மகா சமுத்திரம் போன்ற ஏழ்பிறப்பில் (நான்) மூழ்கி, (மனத்திலே உதிக்கின்ற) எண்ணங் களாம் மாயையின் சுழற்சியினுள்ளே வெளிவர முடியாது அகப்பட்டுக் கலங்குதல் நன்றா (நன்றன்று என்றபடி): உரை - 468. " இருக்கும் எகரும் சாமமும் . இவை தலையாய ஒத்து. இவை வேள்வி முதலியவற்றை விதித்தலின் இலக்கணமுமாய் வியாகரணத்தாற் காரியப் படுதலின் இலக்கியமுமாயின. அதர்வமும் ஆறங்கமும் தரும நூலும் இடையாய ஒத்து அதர்வம் ஒழுக்கம் கூறாது பெரும்பான்மையும் உயிர்சட்கு ஆக்கமேயன்றிக் கேடு சூழும் மந்திரங்களும் பயிறலின் அவற்றோடு கூறப்படாதாயிற்று." தொல், புறத் -சூ 20. ந.

  • ஜகத்ரயம் - மூவுலகு - சுவர்க்கம், மத்தியம், பாதாளம் என்ற மூன்று உலகங்கள்: பூமி, அந்தரம், சுவ்ர்க்கம் பூலோகம் பரலோகம், பாதாள லோகம் - என்பாரு முளர்.

11 ஏழ் பிறப்பு. பாடல் 743-பக்கம் 218 - கீழ்க்குறிப்பு