பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 107 மார்பும், (துணையுறுதோளும்) இரண்டு தோள்களும் (துணி பட) அறுந்து விழவும், வாளாயுதம் கொண்டு போர்புரிந்த பெருமாளே. (நலயோகம் புரிவது கிடையாதோ) 1040. (வாதம்) வாயு சம்பந்தமான நோய்கள், தலைவலி, (குலம்) சூலை நோய், (பெருவயிறு) மகோதரம், ஆகிய நோய்களான இவை ஒன்றும் என்னை அணுகாமலும். மாயை - அஞ்ஞானம் - நிரம்பிய உடல் கொண்டு வாழும்படி விடும் கருவின் வழியொன்றும் (என்னைச்) சேராமலும் வெள்ளமாய் நிறைந்து நிற்கும் கடலில் மேலும்மேலும் வீசுகின்ற திரைகள்போன்ற பிறப்புக்களில் (நான்) அலைச்சல் உறாமலும் (உனது) திருப்புகழை ஒதுகின்ற பல அடியார்களும் நற்கதி, பெறவும் - நான் உனது திருவடியினைகளைப் பெறுவேனோ! இசையின்பமும், உன்புகழைச் சொல்லுகின்ற ஒசையின்பமும் (கலக்க) உள்ளக் கனிவோடு - பக்தியோடு - வேத வாக்கியங்களை நன்கு விளங்கும்படி ஒதுகின்றவர்களுடைய கேடின்பெருவலி - கேட்டினை விளைக்கும் ஊழ்வினையின் பெருவலி (மாளும்படி) அவர்களைப் பிடிக்காது ஒழியும்படி, அவர்களோடு (எப்போதும்) கெழுமுதல் - பொருந்துதலை - உடனிருந்து காக்கும் தருவருளை உடையவனே! வேதங்கள் தொழுகின்ற திருமாலும், பிரமனும் விரும்புகின்ற திருவடிகளையுடைய வெற்றி வீரனே! " கீதம் புகலிசை நாதங் கனிவுறு கீரன் தமிழிசை மொழியாலே கேடும் பொருவலி மாளும்படியடல் கீறுங்கர அயி லுடையோனே" என்றும் பாடம் #வேதம் தொழு திருமால். நன்கோதும் நல்ல வேதத்துள்ளான் ... புனல் வண்ணன்' - இயற்பா. 3 ஆம் திரு அந்தாதி. 11