பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 109 மேலெழுந்து எதிர்த்துப் போர் செய்த சூரன் பொடி பட்டழியும்படி வேலாயுதங் கொண்டு போர் செய்த ப்ெருமாளே! (யான் உன் கழலிணை பெறுவேனோ) 1041. (ஊனே) ஊன் பொருந்திய இவ்வுடலே, (தானாய்) (தான்) நான் என நினைத்து, (ஒயா நோயால்) என்றும் ஓயாத (முடிவிலாத) நோயாளனாய், (ஊசாடு) ஊசுதலை (அழிதலை) உடையதும், (ஊசல்) ஊஞ்சலைப் போல அசைவுள்ளதும் - மாறிமாறி ன்றதுமான (குடில்பேணா) தேகத்தைப் பேணி (விரும்பி) நூல்களை ஒதியும், (மோதா) தாக்கிப் பேசியும், செய்கின்ற (வாதாகாதே சமய வாதங்களில் ஈடுபடாமலும், உலக ஆசார கட்டுப் பாட்டுக்களில் உள்ளம் பொருந்தாமல் வேறுபட்டும், அல்லது குடில் பேனா) தேகத்தைப் பேணாமல். வாதங்களில் ஈடுபடாமல், லோக ஆசார நியதிகளில் உள்ளம் பதியாது வேறுபட்டு - (நானே நீயாய் நீயே நானாய்) எனது ஜீவாத்மாவானது பரமாத்துமாவாகிய உன்னுடன் ஒன்றுபட்டுப் பொருந்தி பலவகையான வேதப் பொருள் கொண்டு (நாடா) உன்னை நாடி விரும்பி (வீடாய்) வீடு பேற்றை யடைந்தவனாய், ஈடேறுதலில்லாமல், நாயனைய அடியேன் இறந்து படக்கடவேனோ! விண், காற்று, தீ, நீர், பார் (மண்) ஆகிய இவ்வைம்பூதங்களாய் விளங்கிப் பாருக்கு இவ்வுலகிலுள்ள்ேருக்கு - உலகிலுள்ள பெரியோர்களுக்கு-உரியவனாய்த் திகழ்பவனே! மாயா - என்றும் அழிவில்லாத (மானே) பெரியோனே! பெருமானே! சீமானே (கோனே) தலைவனே (மானார்) மான் போன்ற வள்ளி தேவசேனைக்கு (வாழ்வே செல்வக்கணவனே! கோழிக் கொடியோனே! தேனே - தேன்போலினிப்பவனே (தேன் நீள் கான் ஆறாய்) தேன்போலும் இனிப்புள்ள நீண்ட காட்டாறாக (தேனாறு என்னும் யாய்) வீழ் - j (தேசார் சாரல் கிரி) தேசு t_ஆர் . ஒளி பொருந்திய, சாரல் கிரி - மலைப் பக்கங்களை உடைய கிரி தேனாறு பாய்கின்ற மலையிடம் - அதாவது குன்றக்குடி என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே! சேயே! - செவ்வேளே! அழகனே! தலைவனே தேவனே! தேவர்கள் பெருமாளே - அல்லது தெய்வப் பெருமாளே! (நாயேன் மாயக் கடவேனோ)