பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 117 தோரா சேனாதாரா - தோல்வியே அறியாத சேனாபதியே! வானோர் சேனாதாரா - தேவர் சேனைகளுக்குப் பற்றுக் கோடான வனே! சூரனே (சாரல்) வள்ளி மலையில் தினைப் புனத்திலிருந்த மாது - வள்ளியின் தோளை அணைந்த தோள் பன்னிரண்டு உடையவனே பெரிய சூரன் தூள்பட்டு விழச் சிறு - சிறியதும் (தாரை) கூர்மை யுடையதுமான - (சீராவாலே) உடைவாளாலே - வாளாலே - வேலாலே - அழித்த வீரனே! சேயே செவ்வேளே! அழகனே! தலைவனே தேவனே தேவர் பெருமாளே - தெய்வப் பெருமாளே! (ஆர் வேறாள்கைக்கு உரியார்) 1046. அகலமும், நீளமும் எதனாலும், எவராலும், ஆராய்வதற்கு அரியதான மெளன நிலையே" கோயிலாகப் பொருந்தி - (அசையவே) விளக்கம் தரவே, (க்ரியா பீடம் மிசை புகா) கிரியை மார்க்கம் என்னும் பீடத்தின்மீது புக்கு இருந்து - கிரியை மார்க்கத்தை அநுட்டித்துப் (பின்னர்) (அல்லது - மனம் அசையவே சலனப்படவே கிரியா பூஜை செய்யப் புகாமல்) - மகா ஞான அறிவுடனே ஆதர ஆமோத அன்பு மகிழ்ச்சி எனப்படும் (மலர் து.ாவி) மலர்களைத் துள்விப் பூசித்து (சகல வேதன அதீத எவ்வகையான அறிவுக்கும் (அல்லது வேதங்களுக்கும்) மேம்பட்டதான, (சகல வாசக அதீத எவ்வகையான உரை ங்கும் மேம்பட்டதான, (சகல மாக்ரியா தீத) எவ்வகையான சிறந்த #ြဲ႔ ႕ மேம்பட்டதான, சிவ ரூபமான, (சகல சாதக அதீத எவ்விதமான தோற்றம் - அல்லது பிறப்புக்கும் மேம்பட்டதான, (சகல வாசன அதீத எவ்வித நறுமணத்துக்கும் (அல்லது அறிவுக்கும்) மேம்பட்டதான (தனுவை) ஒர் உருவை (நாடி) விரும்பிச் சிறந்த பூஜையைச் செய்யும் பாக்கியம் (விகட தார விகடதர) மாறுபாடுள்ள (சூதான) வஞ்சக முள்ள (நிகள பாத) பந்தத்தில் வீழ்தலை - பந்தம் உண்டாதலை (போதுள்ள) போகும்படி - அழியும்படித் - துாள்படுத்துபவனே! (விரகர்) தந்திரம் உடையவர்களுக்கும் (ராக போதார்) - ராகத்தில் ஆசைகளை அனுபவிப்பதிலேயே பொழுதுபோக்குபவர்களுமான - அசுரர் கால - அசுரர்களுக்கு யமனாய் நின்று அழித்தவன்ே!