பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெது) திருப்புகழ் உரை 119 (விபுத தேவனே (மாலிகா) மாலை அணிந்தவனே (நீலமுக) நீல நிறத் தோற்றமுள்ள (படாகம்) திரைச் சிலையை -போர்வையைக் கொண்டதான (மாயூர) மயில் வாகனத்தைக் கொண்டவனே. (விமல) பரிசுத்த மூர்த்தியே (வியாபகா) எங்கும் நிறைந்தவனே! (சில அக) நற்குண உள்ளத்தவனே (விநோத அற்புத மூர்த்தியே! (க்கன கூடம்) விண்ணுலகில் உள்ளதாய் (பாடீரம்) சந்தனம் அணிந்துள்ளதாய், (தவளசோபித) வெண்ணிற அழகை உடையதாய், (உனக்கு ஆட்செய்வதாய் (உன் ஏவலைப் புரிவதாய்), (கவனம்) வேகத்துடன் செல்லவல்ல (யூதரம்) மலைபோன்ற ஐராவத யானைமேல் அல்லது பிணிமுகம் என்னும் யானைமீது - (ஆருட) எழுந்தருளுபவனே! (சத கோடி) நூறு கோடிக் கணக்கான (களப காம கலவைச் சாந்தணிந்த மன்மதர்களுக்கு ஒப்பான வீரனே (வீசு கரம்) கரம் வீசு - கிரணங்களை வீசுகின்ற (முக) திருமுகங்களை உடையவனே (ஆர) கடப்ப மாலை அணிந்தவனே! வேல் வீரனே கருணை மேருவே தேவர் பெருமாளே! (மா பூசை புரிவேனோ) 1047. உள்ளே அடைபட்டுப் போகாமல் நாள்தோறும் இடை விடாமல் - எப்போதும் (போம் வாயு) போகின்ற மூச்சு (அடைய மீளில்) முழுமையும் வீணாகாது மீன்டு வந் அடங்குமாயின் (வீடாகும்) முத்தி வீடு கிடைக்கும் காயசித் తో உயிர்நிலைபெறும் என்று ஆய்ந்து விரும்பி . (உனது) திருவருளைப் பெறாத (அனாசார) ஆசாரம அற்ற ங்கம் லர்தT. கரும யோகியாய் நான் கெட்டு அலையாம்ல் 醬 ఫి எப்போதும் தடுமாறுகின்ற (எனது உடல் வேறு நான் வேறு என்னுடைய மனம் - புத்தி, அகங்காரம், சித்தம் என்னும் கரணங்கள் வேறு - என்று இவைகளை வேறு வேறு என்று தள்ளி - இவை என்.வகளுடனும் சம்பந்தப் படாமல் - (வாசக அதித) உரைகளுக்கு எட்டாததாயுள்ள உனது திருவடியின் மாட்டு (உள்ளம்) உருகி, (ஆரிய ஆசார பரம யோகி று) மேலான ஆசார ஒழுக்கம் வாய்ந்த் சிறந்த (சிவ யோகியாகும் பொருட்டு எனக்கு உன் (உபய ப்ாத ர்ர்சிகம்) இரண்டு திருவடி களாகிய ராஜப்பேற்றினைத் தந்தருளுக †† அனாசார யோகி - பாடல் 212, 197 பார்க்க tt உபய பாத ராசிவம் என்பது பாடமாயின் ராசிவம் - தாமரை - எனப் பொருள்படும்.