பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 139 (கனக பாவனாகார) பொன்போன்ற துாய (உடம்பினனே) மேனியனே பவளம்போன்ற அழகிய (சிவந்த மேனியனே தோகை உடையதும், பச்சை நிறம் கொண்டதுமான உடலினைக் கொண்ட மயில்மீது ஏறும் கடவுளே கருணை உருவத்தனே இதய கமலத்திற் பொருந்திய ஞான சொருபனே கருணைப் பெருமலையே! தேவர் பெ f (நீ ஆள்வதொருநாளே!) 1056 (அதலம்) கீழுலகத்து உள்ள (சேடனார்) ஆதிசேடன் ஆடவும், அகில மேரு மீதாட - அகிலமீது மேரு ஆட - பூமி மீதுள்ள மேரு மலை அசைந்தாடவும், அபின (அபின்னம்) ஒற்றுமையுடன் (சிவன து நடனத்துக்கு வேற்றுமை யில்லாத வகையில் அவரது நடனத்துக்கு ஒத்தபடியே) காளி தான் ஆடவும், அவளுடனே அன்று | (அதிர) அவள் நடுங்கும்படி - (அல்லது முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்கக்) காலைவீசித் (தருக்கம் செய்து) போட்டி யிட்டு நடனம் செய்தவரும் இடப வாகனருமான சிவபிரான் ஆடவும், அவருக்குச் சமீபத்தில் அவரைச் சூழ நின்று பூதங்களும் பேய்களும் ஆடவும், இனிமை கொண்ட சரஸ்வதி, ஆடவும் தாமரை மலரில் வீற்றிருக்கும் (அவள் கணவன்) பிரமதேவன் ஆடவும், பொருந்தியுள்ள விண்ணவர்கள் ஆடவும், சந்திரன் ஆடவும், கைவேற்கொடு, மயிலினில் வந்தெனை யாட் கொளல், சகமறியும்படி காட்டிய குரு நாதா எனவும், உலகினில் அனைவர்கள் புகழ்வுற அருணையில் ஒரு நொடிதனில் வரு மயில் வீரா" எனவும் அருணகிரியாரே கூறியுள்ளனவற்றினின்றும் பெறப்படும் - பாடல் 331 - பக்கம் 330 பாடல் 755 பக்கம் 251 கீழ்க்குறிப்புக்களைப் பார்க்க. (அருணகிரி நாதர் வரலாறு பக்கம் 17-20) X கூத்தப் பெருமான் அதிர வீசி ஆடுதல் : "முழங்கழல் அதிர வீசி ஆடுவாய்" - சம்பந்தர். 3-52-4 O அருகில் பூத வேதாளம் ஆடுதல்: " கானடைந்த பேய்களோடு பூதங் கலந்துடனே. மகிழ்ந் தெரியாட லென்னே" - சம்பந்தர் 1-48.3.