பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/167

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 159 1066. (மறலி போல்) யமனை ஒப்பதான (நயன வேற் கொடு) கண் என்னும் வேலாயுதத்தால், மாயா - காம மயக்கில் - மனம் (தோயா) - (தோய்ந்து) - முழுகி, அல்லது (மாயா) (மாய்ந்து) - மனம் அழிந்து, (தோயா) - (காமத்தில்) தோய்ந்து, (வேயார்) மூங்கில் போன்ற (தோளார்) பெண்களைப் பற்றிய (மறை ஒதும்) காம சாத்திரத்தை (கொக் கோக சாத்திரத்தை) (ரகசிய நூலைப்) படிக்கும் (வகையும்) குணத்தையும், (மார்க்கமும்) மனப் போக்கையும் (மறமும்) அதனால் வரும் பாவத்தையும் (மாய்த்திட) போக்கவல்ல - அழிக்கத் தக்க (வாறு) வாய்ப்பு - வழி - பேறு (ஆராயாதே) இன்னதென்று ஆராயாமல், போம் போகின்ற (பழைய) வழியிலேயே (நான்) போய் - (அதனால்) 蠶 திரம் - மனோதிடமும், தைரியமும் . (விறலும்) வீரமும் - வலிமையும் (மேல் பொலி அறிவும்) மேம்பட்டு விளங்கும் அறிவும், (ஆக்கமும்) செல்வமும் (எல்லாம்) வேறுபட்டு - என்னை விட்டு விலகி - நீர் ஏற முடியாத மேடு எப்படியோ அப்படி எனது நிலை நல்வினைக்கு எட்டாத மேடாய் (வினைகளுக்கு இடையே - நான்) (வி னால்) விழுவதால் (களை எழுமதால்) அதனால் (ஒயாது பிறப்பிறப்பு என்னும்) களைப்பு உண்டாவதால் பெரிய வீரனே (பாராய்) (என்னைக்) கண் பார்த்தருளுக நான் வீணாக (மேவாது) இவ்வுலகில் காலம் கழித்து இராமல், என்னை ஆண்டருளுவாயாக; (யமனை உதைத்து)ச் சாய்த்தவர் - விழச் செய்தவர், இறைவர். வீரம் பொருந்திய திருமாலாலும் காணப் படாதவராய்த் தாய் பார்வதியுடனே வாழ்பவர் ஆகிய சிவனது குழந்தையே! மாசு - குற்றம் இல்லாத (உனது) திருவடிகளை நாள்தோறும் வாயிலுள்ள நாவினால் தவறாமல் ஒதுபவர்களின் செல்வனே! (குறவர் கால்) குறவர்களிடத்தே (வாழ்ந்த) (புன அரிவை) தினைப்புனம் காத்த மாது - வள்ளியின் தோளும், பருத்த (கோடு) மலை போன்ற கொங்கையும் சேர்ந்துள்ள திருமார்பனே கூரிய வேலாயுதத்தால் அசுரர்களின் தலைவர்களாம் சூராதியர். அழிந்துபட அவர்களைப் பெரிய கடலிடையே ஒட்டி வெருட்டிய தலைவனே தேவனே வேளே தேவர்கள் பெருமாளே! (எனை ஆளாய்)