பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 முருகவேள் திருமுறை 17 - திருமுறை 1067. தரிசனம் தர தனன தனண தனண தணன தனண தணன தனதான குருதி யொழுகி, யழுகு மவல குடிலை யினிது புகலாலே. குலவு மினிய க்லவி மகளிர் கொடிய கடிய விழியாலே, கருது மெனது விரக முழுது கலக ம்றலி அழியாமுன். கனக மயிலி னழகு பொழிய கருணை மருவி வரவேணும்: *பரிதி சுழல மருவு கிரியை பகிர எறிசெய் பணிவேலா. tபணில வுததி யதனி லசுரர் பதியை முடுக வரும்வீரா, # இரதி பதியை யெரிசெய் தருளு மிறைவர் குமர முருகோனே. இலகு கமல முகமு மழகு மெழுத வரிய பெருமாளே (73) 1068. ரசவாத வெறி நீங்க தனண தண்ண தணன தனன தனண தணன தனதான துயர மறுநின் வறுமை தொலையு மொழியு மமிர்த சுரபாணம். சுரபி குளிகை யெளிது பெறுக துவளு மெமது பசிதீரத்,

  • கிரவுஞ்சன் என்னும் அசுரன் பல மாயைகள் செய்தான்:

"வெற்பினைப் புணரியாக்கும், பானுவை மதிய மாக்கும். மதியினைப் பகலாச் செய்யும்". கந்தபுரா. 2-24-2 அகத்தியர் தெற்கு நோக்கி வந்தபொழுது இவன் ஒரு மலையாக நின்று அவரை அச்சுறுத்தினன். அவர் இவனை நீ மலையாகவே நின்று முருகன் கை வேலால் மாளக் கடவாய் எனச் சபித்தனர். (தொடர்ச்சி பக்கம் 161 பார்க்க)