பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 183 எழுதுவதற்கு முடியாததான அழகினைக் கொண்ட வேடர் மகள் வள்ளியின் இரண்டு கொங்கை மலைகளும் தங்குகின்ற திருமார்பனே! எதிரில் நின்று சண்டை செய்த அசுரர்கள் பொடிபட்டழிய முன் சென்றெதிர்த்துத் தேவர்களின் சிறையை அன்று நீக்கி யருளினாய், அழகு வாய்ந்த குமரனே! ஏழுலகோரும் மகிழ்ச்சி கொள்ள கார்த்திகை மாதர் ஆறு பேருடைய கொங்கையை (முலைப் பாலை) உண்ட செல்வமே! தேவலோகத்துக்குத் தலைவனே! உமா தேவி பெற்ற பாலகனே! திருமால், (அரன்) சிவன், பிரமர் மூவர்க்கும் தம்பிரானே! (அடிகள் புகழும் அன்பு தாராய்) 1081. கொடுமையான நோய்களை அடைந்து விக்கல் எடுத்தும், வாந்தி எடுத்தும், கூன் விழுந்தும், அறிவு மழுங்கும் உடலிற் பொருந்தி வரும் ஒரு மிக வேடிக்கையான மாறுபாட்டு நிலையை அடைந்து இராத படி நிலைத்து நிற்காது அழிவு பெறும் பர சமயக் (கூச்சல் களினின்றும்) பிழைத்து வந்துள்ள என் தலை மேலே மெய்ப் பொருளை (யான்) பெற (நீ உனது) திருவடியை (என் மீது) அன்பு சற்று வைத்துச் சூட்டி, என்னை ஆட் கொண்டு - அருள்வாயே (நட்புச் சற்றுப் பூண்டு ஆண்டு அடி அருள்வாயே ) உன் திருவடியைச் சூட்டி அருளுக என்றபடி (துடி) உடுக்கை வாத்தியம் ஒலிக்க, பேய்கள் கைகள் கொட்டிச் சூழ்ந்து அவ்விடத்திலே தம்முடன் கூத்தாடத் தொகு தொகு திகு திகு தொக்குத் திக்குத் தோம் தாம் தரி என்று தாளம் ii தாளம் பதிவ்ரதை யொத்தக் கான் தனிலாடும் எனக் கூட்டுக. தாளம் தேவி ஒத்துதல் - " தளிரிள வளரென உமை பாடத் தாளமிட - ஓர் கழல் வீசி ஆடும்". சம்பந்தர். 2-111-1