பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/215

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 2O7 1095. பாபம் அற்றவன் எனவும், (அதிகன்) யாவரினும் மேம் பட்டவன் எனவும், மலம்மாசு அற்றவன் எனவும், அசலன் (எதற்கும் அசையாதவன்) எனவும், யார்க்கும் அபயம் (அடைக்கலம்) அருள்பவன் (அல்லது அச்சம் அற்றவன் எனவும்), தனக்கு நிகரில்லாதவன் எனவும், அபாயங்கள் இல்லாதவன் (அல்லது அழிவில்லாதவன் எனவும்) வலிமை வாய்ந்த மன்மதன் எனவும், அருச்சுனன் எனவும், முருகன் எனவும் இணைத்தமைத்து (யாரிடம் பொருள் வேண்டுமோ) அவர் பெயரும் வரும்படிப் பாடிய பாட்டின்) இடையிலே (செருகி). நுழைத்து அந்தப் பாடலை இசையுடன் பாடி - (வனசம்) பதுமநிதி, (மணி) சிந்தாமணி என்னும் ரத்னம், (பணிலம்) சங்கநிதி, (மழை) மேகம், (சுரபி, காமதேனு, (சுரர்தரு) சந்தானம் அரிசந்தனம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம் எனப்படும் ஐவகைத் தெய்வ விருஷங்கள் - இவைகளுக்குக் கொடையில் ஒப்பான கையை உடைய அரசனே நீ - என்று தினை அளவு உள்ள பொருளையும் கொடுக்காத மனிதர்களின் வீட்டு வாசல்தோறும் (சென்று புகழ்ந்து) திரிகின்ற தரித்திர நிலை நீங்கவும், வாக்கு அடங்கவும், மனம் ஒடுங்கவும், ஓர் உபதேசப் பொருளை (எனக்கு அருள்புரிவாயாக (இனன்) சூரியன், நிலவு (சந்திரன்) இவைகளின் ஒளியைத் தலை - தலைப்பாகம் (மலைய) நிகர்க்க (அல்லது இனன் . சூரியன் நிலவுதலை ஒளிவிடுதலை - மலைய நிகர்க்கக்), கால் அடிகளின் நகங்கள் (நொச்சி) இலையை நிகர்க்க இருசதுர திசையில் - (இருநான்கு - எட்டுத் திசைகளில் உள்ள அஷ்ட நாகங்களும் (தன்னைக் கண்டதும்) அச்சம் உற்றுக் கீழே விழ (இரணிய சயிலம்) பொன்மலை - (மேரு போலவும்) (ரசித சயிலம்) வெள்ளிமலை - (கயிலைமலை போலவும்), மரகத மலை - பச்சைமலைபோலவும் (ஈங்கோய்மலை போலவும்) விளங்குவதாய், (விமலை) (தேவி திருக்கையினின்று வந்த நதிகளுள் ஒன்றாகிய

  • அதிகன் அதியமான் என்னும் வள்ளலைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்துப் பெயர் பெற்ற வள்ளல் இவன்.

"கமழ் பூஞ் சாரற் கவினிய நெல்லி அமிழ்து விளைதீங்கனி ஒளவைக் கீந்த. அரவக் கடற்றானை அதிகன்" சிறு பாண். 100