பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/221

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 213 உதறித்தள்ளி, (விதறிய) பதறுகின்ற (கரணம்) (மனம், புத்தி, அகங்காரம், சித்தம் எனப்படும்) கரணங்கள் நான்கும், (மரணம்) இறப்பும் (அற) நீங்கவும், (இங்ங்னம்) விரணம் அற - எனக்குள் பகைமைகள் நீங்க (அல்லது இரணம் அறஇவைகளின் போர் ஒழிய), உருகி - நெஞ்சம் கரைந்து, உரை பருகி. (உனது) புகழைப் பாடி நுகர்ந்து அனுபவித்து நாள்தோறும் ஞான உணர்ச்சி கொண்ட கண்ணைப் பெற ஞானக்கண்ணைப் பெற உன்னுடைய கஸ்தூரி மணம் கமழுவதும் தாமரை மலர் போன்றதுமான (பதயுகளம்) திருவடி இணையை இனி நான் உணர்ந்து உய்ய அருள்புரிவாயாக (கிரணங்கள்) விரிய (வெளிமுழுதும்) ஆகாயம் முழுமையும் விளக்கங் கொள்ளும் (உடுபடலம் அவை) நட்சத்திரக் கூட்டங்கள் சிறிய (பொறிகளென) தீப்பொறிகள் போல (உருக) , (உரகபிலம்) நாகலோகம் - பாதாள லோகம் ஆதிய ஏழு (செகதலமும்) உலகங்களும் (நிகர்) ஒளிவீசும் பலமலைகளும், நல்ல (கெஜ புயக திசையும்) அஷ்ட கஜங்களும், அஷ்ட நாகங்களும் உள்ள அஷ்ட திசைகளும் (உடன் உருக) ஒன்றுபட்டு கூடவே உருகித்தோன்றுகின்ற (கடைநாளில்) யுக முடிவாம் அந்த நாளில் - ஒலித்து எழுகின்ற (கடலை) அல்லது ஒலிக்கும் ஏழு கடல் களையும் (பருகி) உண்டு, (வடவை) வடவா முகாக்கினி (விடு கரிய புகை) எழுப்புகின்ற கரிய நிறப் புகை என்று சொல்லும்படி (முடிவில்) முடிவு இல்லாத பரந்த (ககன முகடு அதில்) ஆகாய உச்சியில் ஒடுகின்ற தோகைப் பட்சியாம் மயிலைச் செலுத்தி, அசுரர்களுடைய யானை, தேர், குதிரை காலாட்படை என்னும் நால் வகைச் சேனைகளுடன் போர் செய்த பெருமாளே! (பதயுகளம். உணர அருள் புரிவாயே) 1098. வதைக்குந் தொழிலில் பழகின அந்த (மறலி) யமனும் (விறல் மதனன்) வலிமை - வெற்றி வாய்ந்த மன்மதனும் (நாங்கள் உனது கொடுமையைக் கற்றறிய உன்னை) வழிபடுவோம் என்று சொல்லும் வகையில், வயிரத்தாலும், மரகதத்தாலும் ஆன மகரமீன் போன்ற குழைகளையுடைய காதின் (அளவாக) அளவுக்கு நீண்டு,