பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/222

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 முருகவேள் திருமுறை 17- திருமுறை வரிசிதறி விடமளவி வளருமிரு கலகவிழி வளையிளைகு ருயிர்கவர வருமாய: இதையமள விடஅரிய அரிவையர்கள் நெறியொழுகி எழுபிறவி நெறியொழிய வழிகானா. இடர்கள்படு குருடனெனை அடிமைகொள மகிழ்வொடுன திருநயன கருணைசிறி தருள்வாயே! *பதயுகள மலர்தொழுது பழுதில்பொரி அவல்துவரை பயறுபெரு வயிறு நிறை யவிடாமுப்பழமுமினி துதவிமுனி பகரவட சிகரிமிசை பரியதனி யெயிறுகொடு குருநாடர்: கதைமுழுது மெழுது மொரு #களிறுபிளி றிடநெடிய கடலுலகு நொடியில் வரு மதிவேகக் கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக கடகமுட னமர்பொருத பெருமாளே (104) 1099. திருவடியை மறவேன் என்றது தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தனதான விடமளவி யரிபரவு விழிகுவிய மொழிபதற விதறிவளை கலகலென அநுராகம்.

  • விநாயகர் பாரதம் எழுதின வரலாறு பாடல் 41-பக்கம் 608 கீழ்க்குறிப்பு " வேதவி யாச னன்பு கெடாதே பாரதம், வாளிலங்கிய ஏடா மேருவின் வாய் வரைந்த பிரானே வாழிய" திருவையாற்றுப் புராணம். " மாழையம் பொற்றை ஏடா, வைந்துதி யாணி கோடா, ஆழி சூழ் உலக வேந்தர் ஐவர் சீர் வரைந்த பிள்ளை' வீர சிங்காதன புராணம். "மருப்பதாம் எழுத் தாணியால் ஆயிர மாற்றுப் பொருப்ப தாந்தனி ஏட்டிலே பாரதப் பொருளை விருப்ப தாம்படி எழுதிய கரிமக விமலன் திருப்ப தாம்புய மலரினை யிறைஞ்சுவாம் சிரத்தால்"

- செவ்வந்திப் புராணம். "நீண்ட வரை வரைமீது நிறை குணத்தோன் சொல் பனுவல் பூண்டதனி மருப்பாரப் புனைந் தெழுதி" - சீகாழிப் புராணம் தொடர்ச்சி பக்கம் 215.