பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/249

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 241 (கூறும்) சொல்லப்படுகின்ற (வானப் புவிக்கு வானத்துக்கும், பூமிக்கும் (ஊறு திரக் கெடுதல் வரா வழிக்கு ஒரு குறிப்பு நீதியை (ஒதுறா நிற்ப) போதித்துக் காட்ட வேண்டி அந்தக் கொடியவனான காலனுடைய மார்பிற் படும்படி உதைத்த சிவபிரானும் - ஆக இம்மூவரும், (முறையே) ஒவ்வொரு கற்புவாய்ந்த (கோதை) பெண்மீது - முறையே (லகூத்மி, சரஸ்வதி, பார்வதி) எனப்படும் பெண்களுடன் கூடிக் காமக் கடற்கு இடைமூழ்க - காம ஆசைக் கடலின் இடையே முழுகும்படிக் (காவி) நீலோற்பலத்தின் (கொத்தலர்ப்பாணம்) கொத்தான மலர்ப்பாணத்தை (ஏய்) எய்த பிரயோகித்த (வித்தகம்) சாமர்த்தியம் வாய்ந்த மன்மதவேளின் மைத் துனப் பெருமாளே! (நீதிப் பொருள் தரவேணும்) 1110. (கரவு) வஞ்சக எண்ணம் கொண்ட பெண்களின் குங்குமம் செஞ்சாந்து அணிந்துள்ள (பயோதர தனங்களின் - பாலைத் தரிப்பதான கொங்கைகளின் மீது - (அல்லது கொங்கையாகிய செல்வத்தின் மீது) (அறா) நீங்காமல் - எப்போதும் துரங்கும் (இன்ப மும்) (சரிபேசும்) வளையல்கள் ஒலிக்கும் கர சரோருகம் - சரோருக கரம் - தாமரைக் கையில் உள்ள நகம் பட நகத்தின் கீறலால் (காம) (விடாய்) தாகத்தை தீர்த்துக் கொள்ளும் (இன்பமும்), தாமரையன்ன உந்தியில் அணையும் வாழ்வாம் இன்பமும் அரவு (பாம்பு) போன்ற நுண்ணிய இடையில் படிந்து (அல்லது பாம்புபோல இடையிற் படிந்து) - காம இன்பத்தை அனுபவித்து இரவு முழுமையும் (காமத்தில் மூழ்குகின்ற மகிழ்ச்சியைத்தரும், இனிய பெருங்கடலின் சுகநலத்தைப் ப்ெறுகின்ற (ஆறும்) வழியாம் இன்பமும் - தோளும் தாளும் பிணைந்துருவொன் றெய்தி நாளும் நாகர் நுகர்ச்சி நலத்தரோ" - சிந்தாமணி 217, 1347, 16