பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/251

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 243 வாயிதழைப் பருகி அதிற் கிடைத்து அநுபவிக்கும் அமுத (இன்பமும்) இவ்வின்பங்களெல்லாம் என்னை விட்டு ஒழிய - மவுன பஞ்சர மனோலய சுகம் - மவுனம் என்னும் கூட்டில் இருப்பதாற் சித்திக்கும் மனஒடுக்கம் என்னும் சுகநிலையைத் தந்தருளுக பரந்து செல்லும் ஆயிரக்கணக்கான கிளைகளாய்த் திசைகள் நோக்கும் இடமெலாம் பட்ர்ந்து செல்லும் (பகிரதி) கங்கை விதம் விதமான ஆட்டங்களை ஆடிப் பயிலும் (பனா) படங்களை உடையதும், (வனம்.உகந்த) காட்டு வாழ்க்கையில் மகிழும் குணத்தை உடையதுமான பாம்பின் கூட்டம், குளிர்ந்த ஒளிக்கிரணங்களை வீசும் (அம்பு லி) - சந்திரன், (தாளி) அறுகின் தாளி-கொடிப்புல் - குராமலர், கூவிளம், வில்வம், பூ அரும்புகள், (இதழி) கொன்றை, (தாதகி) ஆத்தி இவைகளைத் (தமது நீண்ட, வளைந்துள்ள சடையில் ந்துள்ளவரான சிவனது உடலம் குழையும்படி அன்புடனே தழுவின நாயகி ஏலவார் குழலி (காமாட்சி) தந்த குமரனே தேவர்களின் பெருமாளே! (மனோலய சுகம் தருவாயே) 1111. (வடிவ வேல்) காந்தியுள்ள வேலாயுதத்தைக் கோபித்து எழுந்தது போல எழுந்து, இளைஞர்களுடைய உயிரை வளைந்து - சூழ்ந்துபோர் செய்யும் வாள்போன்ற கண்களை உடையவர்களாய், உள்ளத்தில் (மாயம்) வஞ்சனை எண்ணம் (வளர) உண்டாகிப் பெருக ஆசை மிக்கவர்கள் போல நடித்து, (அளவி வந்து) கலந் பேசிவந்து, நெருங்கி, மிக்க - பெருந் தொகையான (நிதி) பணத்தைக் (கவர்ந்து) வசப்படுத்திக் கொள்ளையிடுகின்ற மாதர்கள் - "ஆயிர முகமதாகி... வந்திழி கங்கை" - அப்பர். 4-65-7 "ஆயிர நூறுகோடி அணிமுகம் படைத்தி யாண்டும் பாயிரு நீத்தமாகிப் பரவலும்" - கந்தபுரா. 6-13.370 4. தாளி - தாளி அறுகு - இறைவனுக்கு உகந்தது. "நாயேனை ஆளுடையான் தாளி அறுகாம் உவந்த தார்" - திருவாச தசாங்கம். 9 x தழுவக் குழைந்தது. வரலாறு - பாடல் 463, 494, 653-பக்கம் 4, 120, 540. பார்க்க இந்த 1110, 1111 பாடல்களைக் காஞ்சிபுரம் திருப்புகழாகக் கொள்ளலாம்.