உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 257 1117. (தத்துவத்துச் செயலொடு ஒட்டில் பட்ட குருகு - ஒட்டில்பட்டு அக்குருகு சத்துவிட்ட அப்படி போல அடியேனும்) - ஒட்டில் பறவையைப் பிடிக்க வைக்கப்பட்ட கண்ணியிலே (பட்ட) அகப்பட்டுக் கொண்ட (குருகு) பறவையானது தன் (சத்தை) அறிவின் சத்தியை (விட்டப் படிபோல - விட்ட அத்தன்மைபோல இழந்து எப்படி மயங்குமோ அதுபோல - அடியவனாகிய நானும் தத்துவத்துச் செயலொடு - தத்துவ சேஷ்டைகளால் (ஒடுங்கி) - (சச்சில் உற்றுப் படியில்) படியில் (இந்தப்) பூமியில் (சச்சில்) பதர்போல பயனற்றவனாய் (உற்று) இருந்து வாழ்ந்து, (விட்டு விட்டு) அப்போதைக் கப்போது இருந்திருந்து - குளறி) தடுமாற்ற முள்ள பேச்சுக்களைப் பேசிச் (சத்துவத்தை) உண்மைப் பொருளைப் (பிரிய விடும் வேளை) விட்டு விலகிப் பேசும் பொழுதெல்லாம் - (நான் உண்மை நெறியை விட்டு விலகிப் பொய்ந்நெறியிற் படரும் போது) - (நீ) பரிசுத்தமான (முத்தப் பதவி) மோட்சப் பதவியை அடைந்துள்ள சிறந்த பக்தர்களுடனே (தொக்கு (என்னை) ஒன்று கூட்டிச் சேர்த்து (அல்லது பக்தரோடு கூடி) பக்தர்கள் உன்னுடன் வரச் (சற்று) தயைசெய்து (கடையன்) கடையவனாகிய - இழிந்தோனாகிய எனது (மிடிதீர வறுமை தொலையத் (துப்பு) பவளம் முத்து - இவைகளின் நிறம் கொண்ட (சரணம்) கால்களை உடைய பச்சைநிறம் கொண்டதும், ஜெயமே கொண்டதுமான (புரவி) குதிரையாம் மயிலை (சுற்றவிட்டு) சுழலுவது போல வேகமாகச் செலுத்தி வந்தருள வேண்டும் (வித்தக அத்தி) பெருமை (ஞானம்) பொருந்திய யானை, பவள நிறம் கொண்டவன் தொப்பை பெருவயிற்றை உடைய (அப்பன்), அண்ணல் ஆகிய கணபதிக்கு இளையவனே - தம்பியே ஜெயம் பொருந்திய (சத்தி) சத்திவேலைக் (கரக - கர அகது திருக்கரமாம் இடத்தில் - திருக்கையில் -உடையவனே முருகனே! கிரவுஞ்ச மலையும் எட்டுத் திக்குகளும் வட்ட மிட்டுச் சுழல விட்ட வட்டமாகச் சுற்றிச் சுற்றிச் சுழலும்படிச் செய்த பச்சை நிறமுள்ள (சரணம்) தோகையைக் கொண்ட மயில் வீரனே! 17