பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/274

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 முருகவேள் திருமுறை (7- திருமுறை எட்டா நெட்டா கத்தோ கைக்கே புக்கோ லத்திட் டிமையோர்வா. னிற்பா ரிற்கு ழச்சூ ரைத்தா னெட்டர் வெட்டிப் பொரும்வேலா, tமுட்டா மற்றா ளைச்சே விப்பார் முற்பா வத்தைக் களைவோனே. முத்தா முத்தி யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே (127) 1122. திருவடியை அணுக தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் தனதான பட்டா டைக்கே பச்சோ லைக்கா துக்கே பத்தித் தனமாக்கும் பக்கே நிட்டு ரப்பார் வைக்கே பட்டா சைப்பட் டுறவாடி, ஒட்டார் நட்டார் x வட்டா ரத்தே சுற்றே முற்றத் தடுமாறும் ஒட்டா ரப்பா விக்கே மிக்கா O முற்றாள் கிட்டத் தகுமோதான்; "ஒலத்திட்டு இமையோர் - சூழ ஓலமிட்டு வானோர் குழ குரனொடு முருகவேள் போரிட்ட போது - சூரன் பல தலை, பல கைகள் கொண்ட பெரிய உருவ மெடுத்துத் தேவர்கள் யாவரையும் உன்ன விண்ணிடை எழுந்தபோது தேவர்கள் ஒல மிட்டுக் கூற்றை நேர்ந்த உயிரென இரங்கல் உற்றார்". அவர்கள் ஓலமிட்ட வகை. " நண்ணினார்க் கினியாய் ஒலம், ஞான நாயகனே ஒலம் பண்ணவர்க் கிறையே ஒலம், பரஞ்சுடர் முதலே ஒலம் எண்ணுதற் களியாய் ஒலம், யாவையும் படைத்தாய் ஒலம் கண்ணுதற் பெருமான் நல்கும் கடவுளே ஒலம் ஒலம்: தேவர்கள் தேவே ஒலம், சிறந்த சிற் பரனே ஒலம் மேவலர்க் கிடியே ஒலம், வேற்படை விமலா ஒலம் பாவலர்க் கெளியாய் ஒலம், பன்னிரு புயத்தாய் ஒலம் மூவரு மாகி நின்ற மூர்த்தியே ஒலம் ஒலம் ஆங்கவன் உயிரை உண்டெம் ஆவியை அருளு கென்றார்" - கந்தபுரா 4-13-160.462 (தொ. பக்.267)