பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 279 (பொய்) வேடன், வேங்கைமரம், வளையல் செட்டி, கிழவன் ஆகிய சில பொய்யான வேடங்களைக் (கோள்) கொள்ளுதலை நத்து ஆம் விரும்பி (ஆசைப்பட்டு) ஆழ்ந்து (மெய் கோணி) நாணத்தால் உடலும் கோணலுற்று வளையப், (போய்) சென்று (முற்பால் வெற்பில் - தமக்குப் பழம் பொருளாம் (வள்ளி யிருந்த) மலையில் அல்லது (சிறப்பில்) முதலிடம் பெறத்தக்க (வள்ளி) மலையில் தினைப்புனத்தில் இருந்த மான் போன்ற வள்ளியின் அழகிய தோள்களிற் (சேர்கைக்காக) சேரும். பொருட்டு (பாதத்தாள்) அவள் பாதமாகிய திருவடியைப் (பற்றிப் பிடித்து வணங்கிப் (புகல்வோனே) ஆசை மொழிகளைச் சொன்னவனே! (முக்கோணத் தானத்தாளை) மூன்று மூலை வடிவமான யந்த்ரத்தில் (மந்திர சக்க்ர்த்தில்) அமைந்து விளங்கும் தேவி பர்வதியைத் (தம்து இடது) பாகத்தே வைத்தவராகிய சிவபிரான் முத்தமிடுதற்கு உரிய குழந்தையே 1126ஆம் பாடலில் தேவியை முற்கூறிச் சிவன் முத்தமிடுதல் கூறப்பட்டுள்ளது. = தாய் தந்தையர் முன் முருகவேள் சென்று "அப்பா ஊரார் சிரிக்க நடுப் பாதையிலே நின்று அண்ணன் கடலை, பொரி எல்லாம் உண்டான்" என்று கோள் சொல்ல. சிவபிரான் இது உண் னோ என்று கணபதியைக் கேட்க, அவர் அப்பா இவன் குறத்தி கொடுத்த திணைமாவை உண்டான்" என்று எதிர்க் கோள் உரைக்க உமையம்மை இதைக் கேட்டுச்சிரித்து முருகனை குப்பென்றெடுத்து முத்தமிட்டதாக ஒரு பாடல் உளது. அது படித்து இன்புறத் தக்கது. "அப்பா அண்ணன் தப்பிதங்கள் அதிகம் என்னக் கயிலை வளர் ஐயன் கேட்கக் கடலை பொரி அப்பம் முறுக்கு தோசை வடை ஒப்பும் போளி எள்ளுண்டைக்(கு) ஊரார் சிரிக்கப் பாதையில் நின்(று) உண்டான் என்ற போ(து) அரனார் உண்மை தானோ கணபதி நீ செப்பாய் என்ன இவன் குறத்தி திணைமா உண்டான் என்ன. உமை சிரிக்க நறும்பூங் கொம்ப ரெனச் செழிக்குஞ் செழியன் பொற்பாவை (தொடர்ச்சி 280 ஆம் பக்கம் பார்க்க)