பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 21 யமனைச் சங்கரித்தவள், பரிசுத்த தேவதைகளுக்குள் மிகப் பரிசுத்தமானவள், முத்தலைச் சூலத்தை ஏந்தியவள், மந்திரங்களின் நல்ல சொற்களைப் பேசுபவள், (காளகண்டி) கறுத்த நீலநிறக் கழுத்தை உடையவள், கபாலத்தை ஏந்தியவள், (மாலினி) மாலையை அணிந்தவள் (அல்லது அக்ஷரங்களின் தெய்வமாக இருப்பவள்) (நித்ய) கல்யாணி காம சாத்திரம் கூறும் லீலைகளை லோகத்தில் நடத்தி வைப்பவள் (வாம தந்திர நூல்) சத்தி உபாசனை முறையைக் கூறும் ஆகம நூலால் ஆராயப்பட்டவள், ஆகிய சிவகாம சுந்தரியாம் பார்வதியின் செல்வமே தேவர்கள் பெ s (வினை தீராய்) 1002. (போதில்) தாமரைப் பூவில் வீற்றிருந்து அதனை விட்டு நீங்காதவனும், அல்லது விடாது - எப்போதும், நான்கு வேதங். களையும் சொன்னவனுமான பிரமாவினாலும் கருட வாகனத்தை விரும்பின திருமாலாலும் அறிதற்கு அரியதான வகையில். (தக்க சமயத்தில் அவர்கள் இருவரும் மிகவும் மாறுபட்டுப் பொருத அந்தப் போதினில் - சமயத்தில்) உயர்ந்தெழுந்த செவ்விய 蠶 பெருத்த வானம் எல்லாம் நிறைவுற்று நின்ற நீங்காத புகழ் பெற்றவனான அரிய 'சிவன் எனக் கீர்த்தி பெற்றவனான ஈசன் - உண்மை நெறியைத் தான் காண - கானும் பொருட்டு அன்பையும் இன்பத்தையும் ஊட்டின சிறந்த குருநாதன் என்னும் வகையில் (உன்னைப்) போற்றி செய்ய இருந்த (உனது) திருவடிகளை (என்னுடைய நா - (எண்ணித்) துதித்திட், எனது. ஆசை (உன்னை) எண்ணியபடியே, எண்ணிய வகையிலேயே (அல்லது உன்னைக் கருதுதற்கு) உன்மேல் (கவிகள்) பாடல்கள் பாடும் (இதம்பல) இன்ப நிலையைப் பார்த்து அறிந்து அடியேனும் (உன்னை) அறிந்து எத்துவது (போற்றும்படியான) ஒரு நாள் எனக்குக் கிட்டுமா! காதை நெருக்குவது போல அதன் (அருகிலே) போய், பல (பூசல்களை) (கலாங்களை விளைவிக்கின்ற) சச்சரவுகளைச் செய் ன்ற கயல்மீன் போன்ற கண்ணையும், கொவ்வைக்கனி போன்ற வாயிதழின் இனிய சுவையையும் நிரம்பக் கொண்ட (குறமாது) வள்ளியின் கருமை நிறைந்த கூந்தலாலும், மலைபோன்ற கொங்கையாலும் ஆடை (அல்லது மேகலை அணிந்துள்ள இடையினாலும், நெருங்கப் பொருத்தியுள்ள (உன்) காதோலையே.