பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 289 1129. அடங்காத மோகம் கொண்டு, பெண்களுடைய (ஆபாத சூட மீதிலே உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரைக்கும் உள்ள அங்கங்களின் அழகில் (விழி ஆலோலனாய்) கண்ணால் கலக்குதல் கொண்டவனாய் - ஈடுபட்டவனாய் . (அல்லது விமியால் - லோலனாய் - கண்கள் ஈடுபடுவதால் காமுகனாகி, (விகாரமாகி) மனம் கலக்கம் அடைந்தவனான (இலஞ்சியாலே குண விசேடத்தால். ஆசா பசாசு மூடி மேலிட - ஆசை என்கின்ற பேயின் தன்மை என்னைக் கவர்ந்து ஆட்கொள்ள, (நான்) ஆசாரம் குறைவு பட்டவனாய், மிகவும் அசுத்தனாகி, (அங்கும் இங்கும்) ஒடி நாளுக்குநாள் கெட்டழியாதவாறு: (உனது) ஈராறுதோளும் - பன்னிரு தோள்களையும், ஆறு மறுமுகமோடு - ஆறு திருமுகங்களுடனே (ஆரும்) நிறைந்துள்ள் (நீபவாச மாலையும்) - வாச நீப மாலையும் நறுமணமுள்ள கடப்ப மாலையையும் (அல்லது ஆர் - ஆத்தியுடன் கடப்ப மாலையையும்) ஏறான ஆணான - (தோகை நீல வாசியும்) மயிலாகிய நீலக் குதிரையையும், அன்பு பூண்டு பிற மக்களும் போற்றிக் புகழுமாறு (அவர்தம்) (திதற) கேடுகள் ஒழிய, நான் ஆசுகவிகளைப் பாடியும், ஆடியும், நாள் தோறும் முன்னுக்கு வருவதற்காக (நீ எனக்கு ஞான உபதேசம் செய்ய என்மீது அன்பு கொள்ள மாட்டாயோ! வாராகி, பெரிய கபாலத்தை ஏந்தினவள், (மாலினி) மாலையை அணிந்தவள். மகமாயி, ஆயி, தேவி, யாமளை (வாசா மகோசரா) வாக்குக்கு எட்டாதவள், பராபரை இங்குளாயி - உள் இங்கு ஆயி - உள்ளத்திலே (இங்கு தங்குகின்ற தாய், (இறைவனுடன் காளியாய்) வாதாடினவள், (மோடி) துர்க்கை (காடுகாள்) வன தேவதை உமை, பெரிய பூமியிலே லீலைகள் புரிபவள், விஷத்தை உண்டவள். மஹா கள்ளி, சூலாயுதத்தை ಕೆ. பாலாம்பிகை யோகினி, (அம் - பவானி) அழகிய LR)//Т&T] – மாலினி - மாலையை அணிந்தவள் (லலிதா. 455); அக்ஷரங்களின் தெய்வமாக இருப்பவள் (அபிராமி. உரை 77), யாமளை - சியாமள நிறத்தை உடையவள். O இங்குதல் தங்குதல், இங்கு சுவை இன்னமுதம்" - சிந்தா. 2025 19