பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/301

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 293 நீவா என்று என்னை நீ (இங்கு) இவ்விடத்திலேயே அழைத்து, (பாரா வரம்) - பாரா வாரம் - கடல் போன்ற ஆனந்த சித்தி - ஆனந்த நிலையைக் கூட்டுவித்து, நேரே - உடனே - பர்மானந்த நிலையதாம் முத்தி நிலையையும் தந்தருள வேண்டுகின்றேன். (வீராகர) வீரத்துக்கு இருப்பிட மானவனே! (சாமுண்டி) துர்க்கை, சக்ர யூகமாக வகுக்கப்பட்டு நிற்கும் (பாரா கணம்) காவல் கணங்களான பூதங்கள் மகிழ்ச்சி கொள்ள்வும், (வேதாள சமூகம்) பேய்க் கூட்டங்கள் (பிணங்களை உண்டு) பிழைக்கும் படியும், போர் புரிந்து வேதா முறையோ என்று அரற்ற - பிரமன் (ஒலம்) என்று முறையிட்டுக் கூச்சலிட, (ஆகாச கபாலம் பிளக்க) அண்டகூடம் பிளவுபட வேர்மா மூலம் - (ம் - வேர் - மூலம்) மாமரத்தின் மூல வேர் - அடி வேரையே, தறித்து வெட்டி (வடவாலும்) வடவா ஆலும் (வடவா) வடவா முகாக்கினி - (ஆலும்) தங்கியுள்ள - (வாராகரம் எழும்) கடல் ஏழையும் குடித்து, (மா குரொடு) பெரிய சூரனுடனே போர் - அவன் ப்ோரிலே செலுத்தின (அம்பு அறுத்து) அம்புகளை அறுத்து, (வானாசனம்) பானாசனம் பானங்களுக்கு (ஆசனமான) - தங்கும் இடமான வில்லையும் (மேலும்) கூடவே (துணித்த) வெட்டித் தள்ளின. ஒளி வேலனே! வானாடு (தேவருலகாம்) பொன்னுலகை (அரசாளும்படிக்கு) (வாவா என வா என்றழைத்து) வாருங்கள், வாருங்கள், வாருங்கள் என்று அழைத்து, (வானோர்) தேவர்களுடைய ( பரிதாபம்) பரிதபிக்கத்தக்க் நிலையைத் துக்கத்தை நீக்கின் பெருமாளே! (பரமானந்த முத்தி தரவேணும்) 1131. ஆலகால விஷத்தை அடக்கம் செய்து வைத்துள்ள வேலாயுதத்தை நிகர்த்து, அழகிய குழையொடும், பொருது பொருவது போல நீண்டு, தங்களுக்கு ஆகாதவரைத் (தொடர் கைக்கு) - பின் சென்று பற்றுதற்கு எ (ண்) னும் - கருதி நிற்பதுபோல விளங்கும் என்களுக்கு (ஈடுபட்டு). (ஆளா) அடிமையாக வசப்பட்டு, (மற்றவர்சுற்றிட) அங்ங்னம் அடிமை பட்டவர் தம்மைச் சுற்றிச் சூழ, (மீளாமல்) தங்கள் சூழ்ச்சியினின்று (அவர்கள்) மீண்டுபோக யாதவாறு (தலையிட்டு) நுழைந்து ஏற்பாடுகள் செய்து (அறிவார் போக்) அவர்களது நல்லறிவு போமாறும், (செயல் விச்சைகள்) தங்களுடைய தொழிற் சாமர்த்தியங்களை விலை பேசிக் -

  • சக்ர யூகம் - பாடல் 997-பக்கம் 8 கிழ்ககுறிப்பு