பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 25 பொன்மயமான மந்தரமலையை (நீர்க்கு) கடல் நீரிலே அசையாதபடி பலமாக (மத்தாக நாட்டி - பொருத்திவைத்து ஒப்பற்ற ஆயிரக்கணக்குள்ள கொடிய தடிய பிளப்புள்ள நாக்குகளையுடைய பாம்பாகிய ஆதிசேடனை (மத்தின்) கயிறாகச் : கடலைக் கடைந்து அமுதத்தை வரவழைத்து அனேக (தேவர்களுடைய) பெரியபசியை நீக்கி அருளின ஆய்ன்) திருமாலும், முன்பு மும்மதில்களும் தீயிலழிய அதிகபாரமானதும் (வாடை, வடக்கேயுள்ளதுமான பெரிய மேருமலையைக் (கோட்டிய) (வில்லாக) வளைத்த வீரனாகிய சிவபிரானும் எம்பரம் மாற்றிய வாழ்வு எங்களுடைய பரத்துவத்தை மாற்றின - அதாவது எங்களுக்கும் மேற்பட்ட பரத்வத்தை உடைய (வாழ்வு என) செல்வன் என்று (போற்றவும்), அல்லது எங்கள் பரம் - பாரத்தை - மாற்றிய நீக்கின - வாழ்வு என்று போற்றவும்) வஞ்சக அரக்கர்களின் கூட்டம் அழியவும் இந்திரனை வலிய சிறையினின்றும் மீட்டும், அவன் ஊராகிய பொன்னுலகமும் (அடங்கலும்) மற்றும் அவனுக்கிருந்த செல்வங்கள் யாவற்றையும் மீட்டுத் தந்தும், அவனுடைய விண்ணுலகத்தில் தேவர்களைக் குடியேற்றின. பெருமாளே. (அருந்தவம் வாய்ப்பதும் ஒரு நாளே!) 1004.

  • விளங்குகின்ற இரு தி: குழைகளைக் கிழித்துத் தாக்கும் கயல்மீன் போன்ற கண்ணிலும், இன்னிசை போல அசைந்து எழும் பேச்சிலும், (மரு) வாசனையுள்ள இருண்ட கூந்தலிலும், இடையிலும், நடையிலும், காம இச்சையைத் தரும்

இனிப்புள்ள சுவையைத் தருகின்ற ஒப்பற்ற வாயிதழிலும், நகை யிலும் --- பல்வரிசையிலும் அல்லது சிரிப்பிலும் இளம் பருவத்ததும் (முதிராததும்), கஸ்தூரி அணிந்துள்ளதுமான கொங்கைமலையின் அழ்கிலும், (இயலும்) சேர்கின்ற (மயல்கொடு) மோகத்திலே நான் ந்து ஈடுபடுவதும் (அம்மோகத்துக்கு நான் அடிமைப்பட்டுப் பணிவதுமான மனப்பான்மை) குறையாமலே. euBJ0TuBB எம்பரம் மாற்றிய வாழ்வு - சிவனது சூலமும் மாயன் ஆழியும் சூரனை வெல்லாது. முருகன் கைவேலே வெல்லும் ஆதலால் சிவன் - மால் இவர்களின் தலைமை மாறி முருகனுக்கு ஏற்றம் வாய்த்தது. வெங்காள கண்டர்கைச் சூலமும், திருமாயன் வெற்றி பெறு சுடராழியும் சூரன் குலங்கல்வி வெல்லா எனக்கருதியே ..நீ சயித்தருளெனத் தேவரும் சதுர்முகனும் நின்றிரப்ப. தனி யாண்மை கொண்ட நெடுவேல்" வேல் விருத்தம்