உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 329 இடம் விட்டு ஒட்டம் கொள்ள, நெடுமலை மேரு ஆதிய பெரிய மலைகள் இடிபட்டுத் தூளாக (மாவாரி) பெரிய கடல் (தாளி எழ வற்றிப் புழுதி கிளம்ப, பெரியதான ஒரு வயிற்றை உடைய மகாகாளியானவள் (கூளியொடு) பேய்களுடன் பிணத்தின் கொழுப்பையும் மாமிசத்தையும் உண்டு, அந்தப் பேய்களுடன் கூத்தாடும் வண்ணம் (போர்) வென்ற திரனே! குறக்குல மலைவேடர்களின் (கொடி) பெண்ணான வள்ளியின் (அடிகள்) திருவடிகளைக் (கூசாது) கூச்சமின்றி - நாணம் கொள்ளாமல், (நீ சென்று வருட - நீ (கால்பிடிக்கக் கரடி, புலி, இவை திரியும் (கடிய வாரான) கடுமையான நீண்ட (கானில்) காட்டில் (மிகு மிக்குஎழுந்த விளங்கி எழுந்த குளிர்ந்த (கணியின்) வேங்கையின் இளமரமதாக உரு எடுத்து நின்று, (நீடி உயர் குன்று நீண்டு உயர்ந்திருந்த குன்று வள்ளிமலையில் (உலாவி) உலவினவனே! பொல்லாததான ஒப்பற்ற முயலகன் என்னும் பூதத்தின்மீது நின்று நடனம் புரிகின்றவரான சிவனது (ஒருபுறம துற வளரும் மாதா) ஒருபாகத்தில் இடது பாகத்திற் பொருந்தி விளங்கும் தாய் பார்வதி பெற் ய குமரகுருபர மூர்த்தியே அமரர் வா гглт (பேன) விரும்பிப் போற்ற அவர்களுக்கு அருளின - அருளும் - தம்பிரானே! (நாயேனை ஆள இங்ன் வந்திடாயோ) 1144. உறவு மொழி பேசும் (சிங்கிகள்) விஷமிகள், (காம ஆகாரிகள்) காமத்துக்கு இருப்பிடமானவர்கள், முறை - மாமா, அத்தான் என உறவு கூறி (மசங்கிகள் - மசக்கிகள்) மயங்கச்செய்பவர்கள், ஆசை நிறைந்த வேசிகள், உதடுகள் (நகக்குறியால்) கன்றிகள் . ப் போனவர்கள் - நோவுற்றவர்கள், (நானா) கூசுதல் இல்லாத வீணர்கள் (பயன் அற்றவர்கள்)-நகக்குறிகளைக் கொண்ட கொங்கையின்மேல் ஆடை அணிந்தவர்கள், பிணம் என்று சொல்லும்படி (பேய் நீராகிய உணவை பேயின் நீர்மையை பேய்த் தன்மையைத் தரும் ஆவேச நீராகிய கள் உணவை உண்டு, ஆடை நெகிழக் (கோமாளிகள்) கொண்டாட்டம் கொள்பவர் (ஆடை நெகிழும் கோணங்கிகள்) - கடலாற் குழப் பட்ட-உலகில்.