பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/345

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 337 சத்துவம், இராசதம், தாமதம் என்ற மூவகைக் குணங்களும் அழிய (நானா எனவரு நானா நானா என்று முளைக்கின்ற - நான் நான் என எழுகின்ற ஆணவ உணர்ச்சியாம் அந்த அடையாள முத்திரையானது அழிந்து ஒழிய, (ஆரா அமுது அன்ன தெவிட்டாத அமிர்தம் போன்ற முத்தமிழைத் (தெரி) தெரிந்து போதிக்க வல்ல (கனி வாயால்) (உன்னுடைய) இனிய வாக்கினால் உபதேசித் தருளும் ஒருநாள் (எனக்குக்) கிடைக்குமா! திட்டென - திடீரென்று (வாதித்து) எதிர்த்து நின்ற மகாகாளியுடன் (திக்கிட தரிகிட தீதோம்) என்று ஒப்பற்ற, விசித்திரமான பலவகையதான, (வாது ஆடிய தருக்கித்து ஆடினதான கூத்துக்களை நடித்த திருவடி மலர்களைக் கொண்ட பெருமான் 1 +8 =9 ;... 9 x 9 = 81 = 8 + 1 = 9 : ... 9 x 144 = 1296 = 1 + 2 + 9 + 6 = 18 = 1 + 8 = 9 என்றிவ்வாறு கண்டு கொள்க - பெரிய புராண விரிவுரை (சிவக்கவி மணி C. K. S. அவர்கள்) - திருநாவுக்கரசு புராணம் பக்கம் ,ை б64. முத்திரை - என்பது ஆங்கிலத்தில் Seal எனப்படுவது. இது இன்னாருடைய உண்மை அடையாளம் என்பதைக் குறிக்கும். இலாஞ்சனை, இலச்சினை, குறி எனப்படும் முத்திரை யாமோனம் - 1115. ஆம் பாடல். முத்திரை யிட்ட அரசாங்க உத்திரவு போல "நான்" என்னும் ஆணவ முத்திரையிடப் பட்டே இவ்வுலகிற் பிறந்து வளர்கின்றோம். "ஆணவத்தோ டத்துவித மானபடி மெய்ஞ்ஞானத் தானுவினோ டத் துவிதஞ் சாருநாள் எந்நாளோ" - தாயுமானவர். நிற்கு நிலை. 28 இந்த முத்திரை அழிதர வேண்டும் அது இறைவன் திருவருள் கூடினால்தான் அழியும் "அவன் கால்பட் டழிந்ததிங்கென்தலை மேலயன் கையெழுத்தே" என்பதுபோல - கந், அலங். 40 1. காளியுடன் நடம் - "காளி கதம் ஒவ நின்று நடமாடி" " காளியைக் குணஞ்செய் கூத்துடையோன்" - சம்பந்தர். 2-32-5; 3-119.1 22