பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 341 சாமர்த்தியச் செயல்களால் உருக்கம் கொண்டு ஆசைப்பட்டு, அவர்கள் என் கைக்குள்ளே, (மருவு) உள்ள (பொருளான) பொருள்வகைகள் - திரவிய வகைகள் (ஆகும்வரை) செலவழிந்து போகும் வரைக்கும், மெத்தைதனில் உருகி - படுக்கையில் உள்ளம் உருகி, (மோகமாகி لائه பொருள் தீர்ந்துவிட்ட காரணத்தால், ஆசை முடிவுபெற, (அதன்மேலே) அதன் பிறகு 'உமக்கு (வெறுங்கையுடன் வருவது) வெட்கமாக இல்லையா? நடவும் - வெளியேறும், (ஏகும் ஏகும்) போம், போம்; இனி வே பேர்வழிகளை அழைத்து வாருங்கள், பெண்களே, என்று சேடியர்களுக்குக் கட்டளை யிட்டு - முன்னதாக இங்ங்னம் வெருட்டிவிடும் (படிறிகள்) வஞ்சனை எண்ணத்தினராம் வேசையர்களின் மீதுள்ள (நேச ஆசை) அன்பும் ஆசையும் அற்றுத் தொலைய அருள் புரிவாயாக ஒழுங்காக அமைந்த வரிகளை - கோடுகளைக் கொண்ட கமுக மரத்தின்மீது வாளை மீன்கள் தாவிக்குதிக்கும் நீர்நிலைகளை உடைய அஸ்தினா புரத்தை ஆண்டுவந்த வாளேந்திய (நிருபன்) அரசனாம் துரியோதனன் (ஒக்கும் நினைவு முன் இலாமல் வாகுபெலம்) - ஒத்து உடனிருக்கும் நினைவே முன்பு இல்லாமல், தனது (வாகு பெலம்) தோள் பலத்தின் திடத்தையே எடுத்துரைக்க (போருக்கு உற்ற - ஒருப்பட்ட தருமர், பலம் நிறைந்த பீமன், வேலேந்திய அருச்சுனன், வெற்றியே பெறும் நகுலன், சகதேவன் இவர்களுடைய தேர்களை மனமொத்து முடுகிவிட்ட (பாகன்) சாரதி, வாட்போர் நடந்த போரில் அசுரர் தலைவனாம் இராவணனுடைய போரில் துணை செய்ய வேண்டும்" என்று கேட்ட பொழுது கண்ணபிரான் பாண்டவர்க்குத் தேர்ச் சாரதியாயிருப்பதன்றிப் படை ஒன்றும் எடுத்துப் போர் செய்வதில்லை என்று துரியோதனனுக்கு வாக்கு அளித்தார். "நடையுடைப் புரவித் திண்டேர் நாணிவற் கூர்வதன்றி மிடைபடை ஏவி தும்மோ டமர்செயேன் வேந்த என்றான்" - வில்லி. வாசுதேவன், 16