பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/369

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 361 1153. (கலவியின் நலம்) புணர்ச்சியின் இன்பங்களை (உரையா) எடுத்துப் பேசி, (மடவார்) பெண்களுடைய (சந்தனத் தனங்களில்) சந்தனம் அணிந்துள்ள கொங்கைகளில், (வசமதாகி) வசப்பட்டு, (அவரவர்) அந்த அந்தப் பெண்களின் (பாதாதி கேசம் அளவும்) பாதம் முதல் கூந்தல் வரையும் (பாடும்) வர்ணித்துப் பாடுகின்ற, (கவிஞனாய்) பாவலனாகத் திரிகின்ற என்னைக் - (காமம்) ஆசை, (குரோதம்) கோபம் இவை கொண்ட (துார்த்தனை) காமுகன் - கொடியோன் ஆகிய என்னை - (அபராதம்) பிழைபடுகின்ற குற்றம் செய்கின்ற (கபடனை) வஞ்சகனாகிய என்னை - (வெகு பரிதாபனை) மிகவும் பரிதபிக்கத்தக்க வருந்தத் தக்கவனாகிய என்னை, (நாளும்) தினந்தோறும் (ப்ரமிக்கும்) திகைத்து நிற்கும் உள்ளம் கொண்டவனாகிய என்னை, (உருவம் மாறி) - வடிவமும் அழகும் அப்போதைக்கப்போது மாறுதல் அடைந்து, (முறை முறை) ஒன்றன்பின் ஒன்றாக, ஆசாரக் குறைவு உள்ள - ஒழுக்கக் குறைவு உள்ள சமயம் ஒவ்வொன்றையும் ஆய்ந்து, அதில் உள்ள (களவு சாத்திரம் ஒதி) களவு நூல்களைக் கற்று - வஞ்சனைக்கு இடமான வழிகளைக் கற்று - (அவைகளின் துணை கொண்டு) நான் பேசுவதே சரியெனச் சாதித்துப் பேசும் என்னை - (சாத்திர நெறிபோய்) நன்னடையைக் கூறும் வேத நூல்களிற் கூறப்பட்ட வழிகளை விட்டு விலகி, ஐந்து (புலன் வழி ஒழுகிய) புலன்கள் இழுத்துக் கொண்டு போகும் வழியிலேயே நடந்து வந்த (மோகனை) . காமுகனாகிய என்னை, (மூகம் தனில்) ஊமையின் கனவுக்கு ஒப்பாகப் பிறந்து (தோன்றி) தோன்றின ஒரு நொடிப் பொழுதில் மீண்டும் அழிவுறும் (ஆதேச வாழ்வை) திரிபு உடைய இந்த வாழ்க்கையை நிலைத்திருக்கும் என்றே (நினைத்து), (அம்புவியின் மேல்) இந்த அழகிய பூமியில் (பசு பாசத்தே பட்டேனை) பதிஞானம் இல்லாது - இறைவனைப் பற்றிய ஞானம் இல்லாமல், ஜீவான்மா சம்பந்தப்பட்ட பந்தங்களிற் கட்டுண்டவனாகிய என்னை, உன து மலர்நிறைந்த திருவடி யிணைகளிற் (சேர் அப்) சேரவேண்டும் என்கின்ற அந்த