பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 369 அகத்திய முநிவருக்கு உபதேசித்த பொருளை (அளித்தருளி) எனக்கு உபதேசித்தருளி, திருமாலும், பிரமனும் கண்டு அளத்தற்கு அரிதான திருவடித் தாமரையை தந்து அருள் புரிவாயாக (கறுத்து) கோபித்து (அடரும்) எதிர்த்துத் தாக்கின அரக்கர்களுடைய (அணி) படை வகுப்புக்கள் (கருக்குலைய) அடியோடு நிலைகுலைய அவர்களை நெருக்கி ஒரு கூடிண நேரத்தில் அவர்களுடைய கொழுப்பு நிறைந்த குடலை - மாமிசக்குடலை ஒளிவீசும் வேல் கொண்டு - (கறுத்தருளி) கோபித்து (அழித்து), அலக்கண் உறு துக்கத்தில் క్టేజీల్డ (சுரர்க்கு) தேவர்களுக்கு அவர்களுடைய ஊர் பொன்னுலகின் உரிமையைத்தந்து ( அவர்களுடைய) இடரை வருத்தத்தை நீக்கியருளின மயில் வீரனே! (செறுத்து) கோபித்துவந்த யானைக்கூட்டங்கள் திடுக்கிடும் படி அவைகளின் வலிமையுள்ள தந்தங்களை (அரி) சிங்கங்கள் கோபத்துடன் பறித்துப் போர் புரியும் பெருத்த காட்டிலே - போதற்குக் (கருதி) எண்ணி (சென்று) மிகப் பொல்லாதவர். களான வில்லேந்தும் (குறவர்கொடித் தனது) குறவர்களின் மகள் வள்ளியுடைய (சிமிழ்) செப்பு (கரகம்) போன்ற கொங்கையைத் தழுவின பெ s (பொருள் அளித்தருளி பதக்கமலம் அருள்வாயே) 1156. கொஞ்சிக் குலவி ஒப்பற்ற ஒரு மயில்போல வந்து (மனோலிலை) மனத்தில் காமலீலைகள் போன்ற, (அதனால் வரும்) வினைப்பயனை யோசியாது, அந்தத் தீய வழியிலேயே சென்றும், அந்த வழியினின்றும் மீண்டு வராமலும் காலங்கழித்து தீய மனதுடனே, நியாயமற்று (மாபாத காபோதி என) மகா பாதக கபோதி என - மிக்க பாதக நெறியிற் செல்லும் குருடன் இவன் என்று சொல்லும்படி (அல்லது ஆபாத கபோதியென). அடி வேரூன்றின கபோதி குருடன் என்று சொல்லும்படி) - ஆசை - மண், பெண், பொன் என்னும் மூவாசைகளும் . "சிங்க வல்லேறு பொங்கு சினந்தருகி, எழுந்து தாய்த் துமிப்ப இருங்கடா யானை, மத்தகம் பிளந்து மாயிருங் குன்றத்து. சலசல வுக்க தரளக் குவால்" - தணிகை ஆற்றுப்படை 386, 390