பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/380

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 முருகவேள் திருமுறை 17- திருமுறை அருணமணி திகழ்பார வீராக ராமோலி யொருபதுமொர் கணைவீழ வேமோது போராளி அடல்மருக குமரேச மேலாய வானோர்கள் பெருமாளே (162) 1157. நல்வழி பற்ற தனதன தனணத் தனனத் தனதன தனணத் தனனத் தனதன தனணத் தனனத் தனதான கொலைவிழி சு ழலச் சுழலச் சிலைநுதல் குவியக் குவியக் கொடியிடை துவளத் துவளத் தனபாரக் குறியணி சிதறச் சிதறக் கரவளை கதறக் கதறக் குயில்மொழி பதறப் பதறப் ப்ரியமோகக் கலவியி லொருமித் தொருமித் திலவிதழ் பருகிப் பருகிக் கரமொடு தழுவித் தழுவிச் சிலநாளிற். கையிலுள பொருள்கெட் டருள்கெட் டனைவரும் விடுசிச் சியெனக் கடியொரு செயலுற் றுலகிற் றிரிவேனோ, சலநிதி சுவறச் சுவறத் திசைநிலை பெயரப் பெயரத் தடவரை பிதிரப் பிதிரத் திடமேருத். தமனிய நெடுவெற் பதிரப் பணிமணி சிரம்விட் டகலச் சமனுடல் கிழியக் கிழியப் பொருஆரன்