பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/397

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 389 பூமியில் உள்ளோர் காணும்படி இரந்து, ஒப்பற்ற நிலவைச் சடையில் தரித்து இடபத்தில் ஏறி அமர்ந்து, அசைந்துவரும் அலைவீசும் கடல் மீது எழுந்த விஷத்தைக் கண்டத்தில் தரித்து. எதிர்த்துவந்த ஆனையைச் (சங்கரித்து) அதன் தோலை உரித்து உடுத்து, (சமம் அது உற்று ஆடி) சுடுகாட்டை அடைந்து அங்கே நடனம் புரிபவரான - சிவபிரானது இடது பாகத்தில் இருக்கும் உமையம்மை பெற்றருளிய செல்வமே! கடல், சூரன், எழுகிரிகள் இவைகளின்மீது பட்டு அவை அழிந்துபோம்படி வேலாயுதத்தைச் செலுத்தின பெருமாளே! ஆதுலருக்கு ஏழைகளின் பெருமாளே! ஆறுமுகப் பெருமாளே! (தாளிணையைச் சேர எனக்கு அருள்வாயே) 1163. சொக்குப்பொடி (பொட்டு) போட்டு, (எத்தி) ஏமாற்றிக் கையில் உள்ள பொருளைக், (கெத்தில் தந்திர வழியில் (பற்றி) கைப்பற்றி, (சிக்கொடு) உறுதியுடன் (சுற்றுப்பட்டு) சுற்றி வளைத்து, எற்றி (பேச்சினால்) தாக்கி வஞ்சிப்பவர்கள், கொங்கை மேலே சுற்றப்பட்டுள்ள அழகிய பட்டு ரவிக்கையைக் கொண்ட வர்கள் ஆகிய வேசையர்களின் (முற்றிக்கு முதிர்ந்த கரும்பு , (தத்தை கிளி - இவைகளுக்கு ஒப்பு என்று சொல்லும்படியான (சொல்). மொழி என்கிற (பித்துக் கற்பில்) மயக்கைத்தரும் ஆணைச் சொல்லால் (செப்பிய) ஏற்படும் (துயராலே) துன்பத்திலே, ஆதுலருக்குப் பெருமாள் - "ஏழைக் கிரங்கும் பெருமாளே." - என்றார்; பாடல்கள் 22, 1262 "ஆழியினைச் சூரணைவெற் பேயயில்தொட் டாவிதுணித் தாதிதிருச் சோலைமலைப் பெருமாளே." என்றும் பாடம். ii பொட்டு = போட்டு # கெத்தில் = தந்திரமாய். XX முற்று இக்கு = முதிர்ந்த கரும்பு.