பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 429 சகல சமயவாதிகளும், சகல சமயங்களும், அடையக் கூடும், அடைய முடியாது என முறையிடும்படி நிற்பதான பொருளை, அறிவிலியாகிய நான் அறிந்து கொள்ளும்படி இன்று திருவருள் புரிவாயாக (மகர கேதனமும்) மீன்கொடியையும், விளங்கும் செந்தமிழை வீசும் (மலய மாருதமும்) மலயத்து - பொதிய மலைத்தென்றற் காற்றாகிய (தேரையும்) பலவான (வெம்) விரும்பத்தக்க நறுமணமுள்ள (சிலிமுகமும்) (மலர்ப்) பானங்களையும், பல (மஞ்சரி) பூங்கொத்துக்களின் தேனைப் பருகி விளையாடும் - (மதுகரம்) வண்டுகளின் (ஆரம்) மாலை போன்ற வரிசை கொண்ட நாண் - வில்லின் நாணையும், (வி) நிரம்ப - விசேடமான - குஞ்ச அணியும் - பூங்கொத்துக்களை அணிந்துள்ளதும், (கர) கரத்தில் ஏந்தப்பட்டதும், (மதுரம்) இனிப்பைக் கொண்டதுமான கார்முகமும் - கரும்பாகிய வில்லையும் கொண்டு, (பொர) சண்டை செய்ய வந்து எழுந்த (மதன ராஜனை) மன்மதராஜனாம் காமனை வெந்து விழும்படி (முனி) கோபித்த (பாலம்) நெற்றியில் (முகிழ்) தோன்றி விளங்கும் (விலோசனர்) கண்ணை உடைய வரும், அழகிய சிறிய (திங்களும்) பிறையையும், (முது) பழைய (பகீரதியும்) கங்கையையும் அணிந்துள்ள சடை முடியை உடைய வருமான சிவபிரானும், வேதக்கோயிலில் நின்று அல்லது வேதச் சிலம்போடு நின்று நறுமணம் வீசும் - அழகி -- (முகரம்) ஒலிக்கின்ற சிலம்பணிந்த தாமரை போன்ற திருவடிக்ளை உன்டய சங்கரி, (இமய கிரியின் குமரி (த்ரியம்பகி) முக்கண்ணி - ஆகிய பார்வதியும் தந்தருளிய முருகனே! தேவயானைக்கு இன்பம்தரும் பெருமாளே (தேவயானையை மகிழும் பெருமாளே) (இன்றருள் புரிவாயே) அனைத்துமே" - தக்க 119. ஆரண நூபுரஞ் சிலம்பும் அடிகள் போற்றி" - திருவிளை காப்பு " வேதங்கள் ஒருநான்கும் மெல்லடி மேல் வியன் சிலம்போ" பாசவதைப் பரணி. 192- வேதாந்தத் துட்பொருளை ஆதி பராபரையை" திருப்பனந்தாள் புராணம் O இந்த 1176ஆம் பாடல் - அதிலும் முக்கியமாய் முதல் நான்கடிகள் - மனப்பாடம் செய்யத் தக்கனவாம்.