உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 433 (துணை ஒத்த) (அடியார்களுக்குத் துணையாய் நிற்கும் (அல்லது இரண்டு) (பதத்தர்) திருவடிகளை உடையவர், எதிர்த்துப் (பாணம் எய்த மன்மதனைக் (கடிந்த எரித்தழித்த (முத்தர்) இயல்பாகவே (பாசங்களின் நீங்கியவர்) ஆகிய சிவபிரானது (கருத்து அமர் - பெருமாளே! எண்ணத்தில் (சித்தத்தில்) அமர்ந்துள்ள பெருமாளே முத்தர் - சிவபிரானது தொலைவற்ற அழிதலிலாத - மிக நிறைந்த க்ருபைக்குள் - (தேவர்கள் மீது வைத்த) கருணை மூலமாக (அல்லது கருத்தமர் தொலைவற்ற க்ருபைக்குள் - கருத்தில் உள்ள அழிதலிலாத கருணையால்) உதித்தருள் - தோன் அருளிய பெருமாளே! (உனைத் தொழ முயல்வேனோ) 1178. பூமியில் உன்னுடைய திருவடிகளை நினைத்துத் தியானிப்பவர்களுக்கும் (கால தரிசனை) திரிகால ஞானம் - இறப்பு, நிகழ்வு, எதிர் என்ற முக்கால நிகழ்ச்சிகள், (புலக்கண் கூடும்) அவர் தம் அறிவில் விளங்குவன ஆகும். அவ்வுண்மையை அறியாமலே - புரட்டிப் பேசும் (நெறிமுறை பிறழ்ந்து பேசும்) பாத சமயிகள் வகைகொண்ட சமயவாதிகளின், (அல்லது) பாத(க) சமயிகள் பாபநெறிச் சமயவாதிகளின் (நெறிக்கண்) வழியிலே (பூது படிறரை) புகுகின்ற நடக்கின்ற வஞ்சகர்களை - பொய்யர்களை, புழுக்கள் நிறைந்த பாபத்துக்கு என்று ஏற்பட்ட நரகம் ஏற்றுக் கொள்ளுதல் தவறாது. (பெரியோர்களின்) பாடல்களிற் கொண்டாடப்படும் (உனது) புகழினைப் படிக்கும் திறமும், பாடும் திறமும், இல்லாதவன், களைப்பைத்தரும் - இளைப்பை உண்டாக்கும் பாவச் சுழற்சியிலே சுழற்சியுறும் அடிநாயேன் ஆகிய எனக்கு - "உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம் சவலைக் கடலுளனாய்க் கிடந்து தடுமாறும் கவலை" - திருவாசகம். II-77 "காதி மோதி வாதாடு நூல் கற்றிடுவோர். மா காலன் ஊர் புக் கலைவார்". திருப்புகழ். 1031

  • படிக்கின்றிலை பழநித் திரு நாமம்", "படிக்கும் திருப்புகழ் போற்றுவன்". கந்தரலங். 75, 50

28